For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’இவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குங்கள்’..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி..!!

Minister M. Subramanian has said that the names of the dead and those who have left the town should be removed from the voter list.
07:52 AM Aug 28, 2024 IST | Chella
’இவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குங்கள்’     அமைச்சர் மா சுப்பிரமணியன் அதிரடி
Advertisement

இறந்தவர்களின் பெயர் மற்றும் ஊரை விட்டு சென்றவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நீலாங்கரையில் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்ட 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் ஊரை விட்டு வெளியே சென்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதை பிஎல்ஓ 2-வாக செயல்படுவோர்கள் கவனித்து தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத நபர்களின் பெயர்களை நீக்க வேண்டும்.

அப்படி பெயர்கள் கொடுத்தும், அவர்கள் நீக்கவில்லை என்றால் என்னிடம் வந்து சொல்லுங்கள். நான், சென்னை தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையரிடம் பேசி, தேவையற்ற பெயர்களை நீக்குகிறேன். தேர்தல் முடிவுகளில் சென்னை பகுதிகளில் வாக்கு சதவிகிதம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமே, இறந்தவர்களின் பெயர்கள், ஊரை விட்டு வெளியே சென்றவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பது தான்” என்றார்.

Read More : இது எங்கள் அடையாளம்..!! நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்..? விஜய் மீது பாய்கிறதா நடவடிக்கை..? பரபரப்பு புகார்..!!

Tags :
Advertisement