புற்றுநோயை எதிர்த்து போராடும்!! பூண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!!
நம் அன்றாட வாழ்வில் பூண்டு சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
மருத்துவ குணம் நிறைந்த பூண்டு வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இதில் கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு மற்றும் பல அத்தியாவசிய தாதுக்களும் பூண்டில் உள்ளன. பூண்டு சாப்பிடுவதால் சளி மற்றும் காய்ச்சலை நீக்கவும் உதவும். பூண்டில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் சளி மற்றும் காய்ச்சலை போக்க உதவுகிறது.
பூண்டு சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் பிரச்னையை கட்டுப்படுத்த முடியும். பூண்டு தமனிகளில் பிளேக் படிவதைத் தடுக்க உதவும். இதனால், இதய நோய்களின் அபாயங்கள் குறைக்க முடியும். மேலும் பூண்டு சாப்பிடுவதால் புற்றுநோயின் அபாயங்கள் குறைகின்றன. பூண்டில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருப்பதால், பெருங்குடல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், கணையப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய்களின் அபாயத்தை தடுக்க உதவுகிறது.பூண்டின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம், தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி போன்ற கீல்வாதத்துடன் தொடர்புடைய அறிகுறிகளை எளிதாக்கும். பூண்டை உட்கொள்வதால், குருத்தெலும்புக்கு சேதம் ஏற்படாமல் கீல்வாதத்தைத் தடுக்கலாம்.
உயர் இரத்த அழுத்தத்தை போக்க பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூண்டு உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் இதய நோய்களைத் தடுக்க உதவும். உடல் எடை குறைய வேண்டுமானால் பூண்டு சாப்பிடலாம். பூண்டில் உள்ள சில அத்தியாவசிய சேர்மங்கள் உடல் கொழுப்பைக் குறைக்கவும், ஒட்டுமொத்த எடையைக் குறைக்கவும் உதவும். பூண்டில் நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பி6 மற்றும் சி நிறைந்துள்ளதால், இவை எடை மேலாண்மைக்கு உதவும். பூண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முகப்பரு குறைக்க உதவும் மற்றும் சருமத்தை சுத்தப்படுத்த உதவும். பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை குறைக்க உதவதுடன் சருமத்தை தெளிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் பூண்டு உதவுகிறது.
Read More: ‘மேற்கு வங்கத்தில் கிடந்த பக்கத்து நாட்டு எம்பியின் உடல்’ என்ன நடந்தது?