For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நெருங்கும் பண்டிகைகள்!… இன்றுமுதல் ஆவின் அதிரடி தள்ளுபடி!… விலை லிட்டருக்கு ரூ.50 குறைப்பு!

07:18 AM Dec 02, 2023 IST | 1newsnationuser3
நெருங்கும் பண்டிகைகள் … இன்றுமுதல் ஆவின் அதிரடி தள்ளுபடி … விலை லிட்டருக்கு ரூ 50 குறைப்பு
Advertisement

பண்டிகை காலங்களை முன்னிட்டு, அடுத்த 50 நாட்களுக்கு ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 குறைத்து விற்பனை செய்யப்பட உள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக, ஆவின் இயக்குநர் வினீத் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் பொதுமக்கள் தேவையை அறிந்து பல்வேறு வகையான பால் உபபொருட்களான நெய், வெண்ணெய், தயிர், பன்னீர், ஐஸ்கிரீம் மற்றும் நறுமண பால் வகைகளை 1000க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி விற்பனை செய்து வருகிறது.

மேலும் பால் உபபொருட்களின் விலையிலும் தரத்திலும் பொதுமக்கள் விரும்பும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பண்டிகை காலங்களில் பொதுமக்களிடையே ஆவின் பால் உபபொருட்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அவ்வகையில் பொதுமக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் ஆவின் நெய் எதிர்வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் ஜனவரி 20ம் தேதி வரை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி செய்து விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement