ஃபெஞ்சல் புயல் பாதிப்பு.. தனது ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்..!!
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் என வடமாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அந்த வகையில் திருவண்ணாமலை பகுதியிலும் கனமழை பெய்தது. கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததில் திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வஉசி நகர் பகுதியில் இரண்டு வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்தன.
இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் நடக்கின்றன. கனமழையால் வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உணவு, குடி தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளார். அதற்கான காசோலையை தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் வழங்கினார்.
Read more ; எஸ்பிஐ வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாதம் ரூ.86,000 சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!