ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி.. புதுச்சேரி மக்களின் வங்கி கணக்கில் ரூ.5000 வரவு வைப்பு..!!
ஃபெஞ்சல் புயல் ஒரு தாக்கம் காட்டிவிட்டு தான் சென்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக, இந்த புயல் புதுச்சேரிக்கு பக்கத்தில் கரையை கடந்த காரணத்தால் அங்கு கனமழை பெய்து வெள்ளம் ஏற்ப்பட்டது. பல பகுதிகளில் நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது என்று கூட சொல்லலாம்.
இதனையடுத்து, புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி கடந்த 2ம் தேதி அறிவித்திருந்தார். இத்தொகை எப்போது கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிவாரண நிதிக்கான கோப்பு நிதித்துறை மூலம் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கோப்புக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 அவரவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக, இந்த பகுதிகளில் 3 லட்சத்து 54 ரேஷன் கார்டுகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.177 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான படிவத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். கனமழையால் உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ. 40,000, கன்றுக்குட்டிகளுக்கு 20,000, ஆட்டிற்கு ரூ. 20,000, சேதமடைந்த படகுக்கு 10,000, விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ. 30,000 நிவாரணம், சேதமடைந்த குடுசை வீடுகளுக்கு ரூ. 20,000 எனவும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more ; Post Office திட்டத்தில் மாதம் ரூ.5000 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் எவ்வளவு கிடைக்கும்?