மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!! இனி இவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவசம்..!! குட் நியூஸ்..!!
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டத்தால், 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள். பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் நோக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
தற்போது சமூக - பொருளாதார நிலைகளை கடந்து 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இத்திட்டத்தின்கீழ் காப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், “சமூக - பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும், வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் இந்த காப்பீட்டு திட்டம் பொருந்தும்.
இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே காப்பீடு வசதி பெற்றிருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். தனியார் காப்பீட்டு திட்டங்கள், ஊழியர்களின் மாநில காப்பீட்டு திட்டங்களில் பயன்பெறும் மூத்த குடிமக்களும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ’நாசா நினைத்தால் சுனிதாவை மீட்க முடியும்’..!! ’ஏன் செய்யவில்லை’..? உண்மை காரணம் இதுதான்..!!