முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிப்.29,2024 லீப் ஆண்டு!… குழந்தை பிறப்பதையும் துர்நிகழ்வாக கருதும் மக்கள்!… எந்த நாட்டில் தெரியுமா?

10:00 AM Feb 18, 2024 IST | 1newsnationuser3
Advertisement

இந்த ஆண்டு நமது காலண்டரில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படுகிறது. வழக்கமான 365 நாட்கள் அல்லாமல் 366 நாட்களுடன் ஆங்கிலத்தில் இருக்கும் ஆண்டு, லீப் ஆண்டு (Leap Year) என்று அழைக்கப்படும் மிகுநாள் ஆண்டாக 2024 இருக்கும். ஆண்டின் மிகச்சிறிய மாதத்துக்குக் கூடுதலாக ஒரு நாள் கிடைக்கிறது. பிப்ரவரி 29ஆம் தேதி மிகு நாள் (லீப் நாள்) என்று அழைக்கப்படுகிறது. மூட நம்பிக்கைகளும் கலாசார பாரம்பரியங்களும் இந்த நாளுடன் தொடர்புடையதாக இருக்கின்றன.

Advertisement

மிகுநாள் ஆண்டு ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். இதற்கு முந்தைய மிகுநாள் ஆண்டு 2020, அடுத்த மிகுநாள் ஆண்டு 2028. ஓர் ஆண்டு என்பது பொதுவாக 365 நாட்களைக் கொண்டது. ஏனென்றால், பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் அவகாசம் இது. ஆனால், 365 என்பது ஒரு தோராயமான எண்ணிக்கை மட்டுமே.

பூமி சூரியனை முழுமையாக ஒருமுறை சுற்றி வர 365.242190 நாட்கள் ஆகும். அதாவது 365 நாட்கள், 5 மணிநேரங்கள், 48 நிமிடங்கள், 56 நொடிகள். இது விண்மீன் ஆண்டு எனப்படும். அதாவது பூமி சூரியனைச் சுற்றிச் சுழலும் உண்மையான கால அளவு. ஆங்கிலத்தில் இதை sidereal year என்பர்.

நாட்காட்டியில் உள்ள 365 நாட்களைவிட மிகுநாள் ஆண்டு சற்று கூடுதலானது. எனவே கூடுதலான இந்த நேரத்தைச் சரிக் கட்டுவதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு முழு நாள் நமது நாட்காட்டியில் கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது. இதன்மூலம், நமது நாட்காட்டி மாறி வரும் பருவங்களுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும்.

மிகுநாள் ஆண்டுடன் தொடர்புடைய பல பாரம்பரியங்கள் மற்றும் மூட நம்பிக்கைகள் உள்ளன. திருமணமாகாத ஆண்களுக்கான இந்த தினத்தில், அயர்லாந்து நாட்டு பாரம்பரியத்தின்படி, பெண்கள் ஆண்களிடம் திருமண விருப்பத்தைத் தெரிவிக்கலாம். இது மிகுநாளில் நடைபெறும். கிரேக்க நாட்டில், மிகுநாள் ஆண்டில் திருமணம் செய்து கொள்ளப்படுவது தவிர்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக, மிகுநாளில். மிகுநாள் ஆண்டில் செய்யப்படும் திருமணம் முறிந்துவிடும் என்று அங்கு நம்பப்படுகிறது.

ஸ்காட்லாந்து நாட்டில், மிகுநாளில் தீங்கு விளைவிக்கும் மந்திரவாதிகள் ஒன்று கூடுவதாக நம்பப்படும் பாரம்பரியம் உள்ளது.பிப்ரவரி 29ஆம் தேதி குழந்தை பிறப்பதையும் துர்நிகழ்வாக ஸ்காட்லாந்து மக்கள் சிலர் கருதுகின்றனர். ஆனால் சில கலாசாரங்களின்படி, மிகுநாள் ஆண்டை அதிர்ஷ்டமானதாக பார்ப்பதும் உண்டு. சில ஜோதிடர்கள், உங்கள் பிறந்த நாள் மிகுநாளாக இருந்தால், நீங்கள் பல சிறப்பான திறமைகள் கொண்டவராக இருப்பீர்கள் என்று நம்புகிறார்கள்

Tags :
2024 லீப் ஆண்டுleap yearகுழந்தை பிறப்புதுர்நிகழ்வாக கருதும் மக்கள்பிப்.29
Advertisement
Next Article