எப்போ வேணாலும் ஆட்சி கவிழும் பயம்!… சிக்கலில் பிரதமர் மோடி!… ட்விஸ்ட் கொடுக்கும் எதிர்க்கட்சிகள்!
BJP: நாடு முழுவது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கு மாறாக, 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி அமைக்கும் அளவில் 293 தொகுதிகளை பெற்றுள்ளது. அதேநேரம் இண்டியா கூட்டணி 232 இடங்களை வென்றுள்ளது.
இந்நிலையில், மத்தியில் ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 3-வது முறையாக பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இருப்பினும், கூட்டணிக் கட்சிகளால், பாஜக எப்போது வேணாலும் ஆட்சி கவிழும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதாவது, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உதவியுடன் ஒருவேளை பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தாலும் அவருக்கு 8 பெரிய செக் வைக்கப்பட்டு உள்ளது.
மோடியை எதிர்கொள்வதற்கான தனது பலத்தையும் துணிச்சலையும் ராகுல் நிரூபித்துள்ளார். எதிர்காலத்தில் அமோக பெரும்பான்மையுடன் ராகுல் மீண்டும் இந்தியாவின் பிரதமராக வருவதற்கான வாய்ப்புகளையும் இந்த தேர்தல் திறந்து விட்டுள்ளது. அரசியல் தலைவர்களுக்கு எதிராக IT, ED அல்லது வேறு எந்த நிறுவனங்களையும் தவறாகப் பயன்படுத்த முடியாது. நாயுடு மற்றும் நிதீஷ் ஆகியோரை மட்டுமே நம்பி இருக்க முடியாது என்பதால், மோடி அவர்களைத் தாண்டி கூட்டணியை உருவாக்க வேண்டும். இந்த ஒரே காரணத்திற்காக, அவர் மாநில கட்சிகளுடன் நட்பாக இருக்க வேண்டும்.
பீகாரில் மாநில அளவில் கட்சியை காக்க பாஜகவை விட தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி பலம் நிதிஷுக்கு தேவை. இதனால் எதிர்காலத்தை மனதில் வைத்து நிதிஷ் இந்தியா பக்கம் கூட செல்லலாம். அந்த முடிவை எடுத்தால் அது பாஜகவிற்கு அடியாக இருக்கும். இதை தடுக்க திமுக போன்ற கட்சிகளை பகைக்காமல் எதிர்காலத்தில் கூட்டணி வைக்க ரகசிய பேச்சுக்களையும் நடத்த வேண்டும்.
மத சார்போ, கோவில் கட்டுவதோ மட்டும் வாக்குகளுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்கள் தங்கள் கருத்துக்களை உரத்த குரலில் தெரிவித்துள்ளனர். இதனால் மத அரசியலில் பாஜக சறுக்கி உள்ளது. பாஜகவிற்குள் குஜராத் கும்பல், ராஜபுத்திரர்கள் மற்றும் மராத்தியர்கள் இடையே பிளவுகள் அதிகமாக உள்ளது. ராஜபுத்திரர்களும் மராத்தியர்களும் குஜராத்தியர்களை எதிர்கொள்ள தயாராகி வருவார்கள்.
மோடி பிரதமராக தொடர்ந்தால், நிர்மலாவுக்கு பதிலாக பியூஷ் கோபால் நிதியமைச்சராக வர வாய்ப்பு உள்ளது. அதேபோல் ராஜ்ய சபா வழியாக் பாஜகவை அமைச்சர்கள் பலர் பதவியை மீண்டும் பெற வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு பாஜக தலைவர் உட்பட பல மாநில பாஜக தலைவர்கள் மாற்றப்படலாம்.
இனி வரும் நேரத்தில், மோடி அடிபணிந்து பாதுகாப்பற்றவராக தோன்றுவார். அவர் தனது சொந்த நிழலைக் கூட நம்புவதற்கு சிரமப்பட்டாலும் படவேண்டும். மன்மோகன் சிங்கைப் போல் மோடி சகிப்புத்தன்மை கொண்ட தலைவர் அல்ல. இதனால் எப்போது ஆட்சி கவிழும் என தொடர்ந்து பயத்தில் இருப்பார்.
Readmore: ஆதார் அப்டேட்!… கடைசி தேதி வந்தாச்சு!… இனிமேல் நீட்டிக்க வாய்ப்பில்லை!… உடனே பண்ணிடுங்க!