For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜீவசமாதியான தந்தை..!! மகன்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!! போலீசுக்கு எழுந்த சந்தேகம்..!! உடலை தோண்டி எடுக்க கோர்ட் உத்தரவு..!!

Police have raised suspicions over a poster in Kerala claiming that his father had passed away.
08:24 AM Jan 16, 2025 IST | Chella
ஜீவசமாதியான தந்தை     மகன்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு     போலீசுக்கு எழுந்த சந்தேகம்     உடலை தோண்டி எடுக்க கோர்ட் உத்தரவு
Advertisement

கேரளாவில் தனது தந்தை ஜீவசமாதி ஆகிவிட்டதாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement

கேரள மாநிலம் அத்தியனூரில் உள்ள கவுவிளாகத்தில் கோபன் சுவாமி (வயது 78) என்பவர், கடந்த சனிக்கிழமை அவராகவே ஜீவசமாதி ஆகிவிட்டதாகவும், நெய்யாற்றின்கரையில் தங்கள் தந்தைக்கு சமாதி கட்டியுள்ளதாகவும் அவரது இரு மகன்களான சனந்தன், ராஜசேனன் ஆகியோர் போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பியிருந்தனர்.

ஆனால், கோபன் சுவாமி மரணத்தில் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. பின்னர், அங்கு விரைந்து வந்த போலீசார், சமாதி அமைந்துள்ள இடத்தில் ஆய்வு செய்ய வந்தனர். அப்போது, கோபன் சுவாமியின் மகன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று சமாதி பீடத்தை தோண்டி எடுப்பதற்கான உத்தரவு நகலை அவர்களிடம் காண்பித்தனர். ஆனால், அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இது குறித்து கேரள ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து தடை விதிக்கக் கோரி மகன்களின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சமாதியை தோண்டி உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் வந்துள்ளனர்.

ஆனால், அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் சமாதி பீடத்தை நெருங்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்து தடுத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில், சமாதி பீடத்தை தோண்டும் முயற்சியை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கோபன் சுவாமி இயற்பெயர் மணியன் என கூறப்படுகிறது. இவர் நெசவுத் தொழிலாளியாக இருந்த பின் ஆன்மீகத்தில் ஆர்வம் காரணமாக தன் பெயரை கோபன் சுவாமி என மாற்றிக் கொண்டுள்ளார். கவுவிளாகத்தில் கைலாச நாதன், மஹாதேவன் என்ற கோயில் கட்டி அங்கு வசித்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை முதல் கோபன் சுவாமி காணாமல் போனதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஜீவ சமாதி ஆகிவிட்டதாக மகன்களால் கூறப்படும் நிலையில், சமாதி பீடத்தில் இருப்பது கோபன் சுவாமி உடல் தானா? அல்லது வேறு நபரா? அல்லது கோபன் சுவாமி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளதால், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : அண்ணாமலையின் ஆட்டம் முடிகிறதா..? அடுத்த பாஜக தலைவர் இவரா..? வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Tags :
Advertisement