For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அப்பா - அம்மாவை மதிக்கவில்லை..!! மனைவி, மகன் கூட வரவில்லை..!! விஜய் குடும்பத்தில் இதுதான் பிரச்சனை..!!

Actor and film critic Pailwan Ranganathan has expressed a sensational opinion about Tamil Nadu Vetri Kazhagam president Vijay's political activities.
10:35 AM Aug 23, 2024 IST | Chella
அப்பா   அம்மாவை மதிக்கவில்லை     மனைவி  மகன் கூட வரவில்லை     விஜய் குடும்பத்தில் இதுதான் பிரச்சனை
Advertisement

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் நடவடிக்கை குறித்து நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் கூறுகையில், ”தவெக கட்சிக் கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்த விழாவில் அப்பா – அம்மா காலில் விழுந்து விஜய் ஆசிர்வாதம் வாங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். விஜய்யின் அம்மா ஷோபா அவரிடம் பேச ஏதோ முயற்சிக்கும்போது, விஜய் கண்டுகொள்ளாமல் போகிறார். பெரியவர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என்றே சொல்லியிருக்கிறார்கள். ஆனால், விஜய் தனது பெற்றோருக்கு உரிய மரியாதை தரவில்லை.

அவரின் மனைவி, மகன், மகள் என யாருமே இந்த விழாவிற்கு வரவில்லை. எனவே, அங்கு ஏதோ சிக்கல் இருப்பது போல், தெரிகிறது. இத்தனைக்கும் அவரின் மகன் சஞ்சய் சென்னையில்தான் இருந்தார். இதுவரை செய்தியாளர்களையும் விஜய் சந்திக்கவில்லை. என்ன பயம் என கேட்க தோன்றுகிறது. அதேபோல், கொடியை அறிமுகம் செய்த அவர், அந்த கொடியில் இடம் பெற்றிருக்கும் சின்னம் மற்றும் பூவுக்கு என்ன அர்த்தம் என விரைவில் சொல்கிறேன் என்கிறார். அதை அப்போதே சொல்லுவதில் அவருக்கு என்ன குழப்பம்.

அனைவரிடமும் சுமூக உறவோடு செயல்படுவோம் என்கிறார். அப்படி என்றால் அவர் யாரை எதிர்க்கப்போகிறார்? என்கிற கேள்வி எழுகிறது. இதற்கெல்லாம் விஜய்யிடம் பதில் இல்லை. கோட் படத்தை புரமோட் செய்யக்கூடாது என விஜய் சொல்கிறார். அப்படியெனில் விஜய் ரசிகர்கள் எப்படி படம் பார்ப்பார்கள்? விஜய் ரசிகர்கள் இல்லாமல் எப்படி கட்சி இயங்கும்..? ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு தைரியம் மிகவும் முக்கியம். அது விஜயிடம் இருப்பது போல தெரியவில்லை” என விமர்சித்துள்ளார்.

Read More : Whatsapp-இல் வருகிறது சூப்பர் அப்டேட்..!! Voice to Text..!! ஆண்ட்ராய்டு பயனர்கள் ஹேப்பி..!!

Tags :
Advertisement