வெட்டிய தலையோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற தந்தை, மகன்..!! ஒரு கிராமத்தையே கலவர பூமியாக மாற்றிய பரபரப்பு சம்பவம்..!!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நானாசி என்ற கிராமத்தில் சுரேஷ் (40) என்பவர் வசித்து வரும் நிலையில், இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரரான ராமசந்திரா குடும்பத்திற்கும் நீண்ட நாட்களாக பகை இருந்து வந்துள்ளது. நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு வெடித்துள்ளது. அப்போது, சுரேஷும் அவரது மகனும் சேர்ந்து ராமச்சந்திராவிடம் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில், சுரேஷ் தனது மகனுடன் சேர்ந்து கொண்டு கோடாரி மற்றும் அரிவாளால் ராமச்சந்திராவின் தலையைத் துண்டித்தனர்.
மேலும், துண்டிக்கப்பட்ட தலையோடு அங்குள்ள காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து, தந்தை - மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட கிராம மக்கள் சுரேஷின் வீட்டை அடித்து நொறுக்கினர். அதோடு, சுரேஷுக்குச் சொந்தமான காரையும் தீவைத்து கொளுத்தினர். மேற்கொண்டு வன்முறை ஏற்படாமல் இருக்க சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சுரேஷும், ராமச்சந்திராவும் ஜனவரி 1ஆம் தேதி ஒருவர் மீது ஒருவர் போலீஸில் புகாரளித்துள்ளனர். மறுநாளே இக்கொலை நடந்திருப்பதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்த விசாரணையில், சமீபத்தில் சுரேஷ் மகள் யாரோ ஒரு வாலிபரைத் திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு ஓடியுள்ளார். இதற்கு குலாப் ராமச்சந்திரா உடைந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தான், இரு குடும்பத்திற்கும் பகையே வந்துள்ளது. இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Read More : வரும் 13ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பால் மாணவர்கள் செம குஷி..!!