உயிரிழந்தவர்களின் தியாகம் வீண் போகாது.. 2026-க்குள் நக்சலிசம் ஒழிக்கப்படும்..!! - அமித்ஷா உறுதி
சத்தீஸ்கரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் தியாகங்களை மறக்க முடியாது என்றும், 2026 மார்ச்சுக்குள் இந்தியாவில் இருந்து நக்சலிசம் ஒழிக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை உறுதியளித்தார்.
பிஜாப்பூர் குத்ரு சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்டுகள் ஐஇடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த விபத்தில் 8 ஜவான்கள், ஒரு ஓட்டுநர் உள்பட 9 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். பல வீரர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வாகனத்தில் எத்தனை இராணுவத்தினர் இருந்தனர் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. நக்சல் நடவடிக்கைக்குப் பிறகு வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அப்போது நக்சலைட்டுகள் குத்ரு சாலையில் பதுங்கியிருந்து IED குண்டுவெடிப்பு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், "பிஜாப்பூரில் (சத்தீஸ்கரில்) IED குண்டுவெடிப்பில் DRG வீரர்கள் இறந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். துணிச்சலான வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது, நான் உறுதியளிக்கிறேன். எங்கள் ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது, மார்ச் 2026க்குள் இந்தியாவில் நக்சலிசத்தை ஒழிப்போம்" என்று இந்தியில் 'எக்ஸ்' என்ற பதிவில் கூறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய மிகக் கொடிய தாக்குதல் இதுவாகும், 2025-ல் நடந்த முதல் தாக்குதல் இதுவாகும்.
Read more ; 8 ஜவான்கள் உள்பட 9 பேர் பலி… ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்..!