முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புரட்டாசி சனிக்கிழமை விரதம்..!! இன்னைக்கு பெருமாளை இப்படி வழிபடுங்க..!!

In this post we will see about Puratasi month fast and worship which is auspicious day for Perumal.
05:00 AM Oct 05, 2024 IST | Chella
Advertisement

பெருமாளுக்கு உகந்த நாளான புரட்டாசி மாத விரதம் மற்றும் வழிபாட்டு முறை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

புரட்டாசி சனிக்கிழமை விரதம் மிகவும் முக்கியமான ஒன்று. புண்ணியம் தரும் புரட்டாசியில் பெருமாளை நினைத்து விரதம் இருப்பது நன்மையை தரும். இந்த மாதத்தில் சிறந்த விரத முறையை கடைப்பிடித்தால் அந்த வருடம் முழுவதும் குறைவில்லாத செல்வத்தைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு.

இன்று புரட்டாசி மாத சனிக்கிழமை. மறக்காமல் பெருமாளை தரிசனம் செய்து துளசி தீர்த்தம் பருகி, கோவிந்தனின் திருநாமங்களைச் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் பெருமாள் தீர்த்து வைப்பார். புரட்டாசி மாதத்தின் அனைத்து நாட்களுமே பெருமாளை வழிபாடு செய்வதும், பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிப்பதும், புண்ணியமும் நற்பலன்களும் தந்தருளக் கூடியவை.

பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விசேஷ அலங்காரங்களும், ஆராதனைகளும் நடைபெறும். இம்மாதத்தில் பெருமாளுக்கு ஒரு கைப்பிடி துளசி கொடுத்தாலே, அதில் மகிழ்ந்து நாம் கேட்கும் வரங்களை அருள்வார் பெருமாள். ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபடும் பக்தர்களைப் போல, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் குடும்பத்துடன் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடும் பக்தர்களும் இருக்கின்றனர்.

இன்று மறக்காமல் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். முடிந்தால் பெருமாளுக்கு துளசி சார்த்துங்கள். தாயாருக்கு வெண்மை நிற பூக்கள் கொண்ட மாலையை, வெண் தாமரை மலர்களைச் சார்த்துங்கள். அதேபோல், கோவிலுக்கு சென்று விட்டு, ஒரு ஐந்து பேருக்கேனும் தயிர்சாதம் அல்லது புளியோதரையை தானமாக வழங்குங்கள். நம் மனதில் உள்ள பயத்தையெல்லாம் போக்கியருளுவார் பெருமாள். திருமணம் முதலானவற்றுக்கு இதுவரை இருந்த தடைகளை எல்லாம் தகர்த்து அருளுவார்.

Read More : ”நான் சீக்கிரம் உடல் நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி”..!! நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை..!!

Tags :
புரட்டாசி மாதம்பெருமாள்வழிபாடுவிரதம்
Advertisement
Next Article