For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'FASTag' கேஒய்சி நாளை கடைசி நாள்.! இதனை அப்டேட் செய்வது எப்படி.?

06:13 PM Feb 28, 2024 IST | Mohisha
 fastag  கேஒய்சி நாளை கடைசி நாள்   இதனை அப்டேட் செய்வது எப்படி
Advertisement

FASTag KYC: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஃபாஸ்டாக் KYC அப்டேட் செய்வதற்கு நாளை கடைசி நாளாக நிர்ணயித்திருக்கிறது. இதனை எவ்வாறு அப்டேட் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Advertisement

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்டாக் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற புதிய முறையை செயல்படுத்த இருக்கிறது. மேலும் கேஒய்சி முழுமை அடையாத ஃபாஸ்ட் டாக்களை செயிரிழக்கச் செய்யவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறைகள் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு அமலுக்கு வர இருக்கிறது. இதன் மூலம் ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்டாக் மட்டுமே பயன்படுத்த முடியும் அதே போல ஒரு ஃபாஸ்டாகை ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பயன்படுத்த முடியாது.

இவற்றை சரி செய்வதற்கு நாளையே கடைசி நாள். இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த ஃபாஸ்டாக் முறைகள் நாளை முடிவடைய உள்ள நிலையில் ஃபாஸ்டாக் மற்றும் கேஒய்சி எப்படி அப்டேட் செய்வது என்று காணலாம்.

வங்கியுடன் இணைக்கப்பட்ட ஃபாஸ்டாக் இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணை உள்ளீடு செய்து otp பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நுழையவும்.

இந்தப் பக்கத்திற்கு உள்ளே சென்றதும் எனது சுய விவரம் என்பதை தேர்வு செய்து அதில் கேஒய்சி டேப்பை கிளிக் செய்யவும்.

அதில் கேட்கப்படும் விவரங்களை உள்ளீடு செய்து முகவரி சான்றை பதிவேற்றம் செய்த பின் அப்டேட் கேஒய்சி ஆப்ஷனை தேர்வு செய்யவும். இப்போது நீங்கள் அப்டேட் செய்த கேஒய்சி உங்களுக்கு காட்டப்படும்.

கேஒய்சி அப்டேட் செய்வதற்கு வாகன பதிவுச் சான்றிதழ், அடையாளச் சான்று முகவரி ஆதாரம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இவற்றில் முகவரி ஆதாரத்திற்கு பாஸ்போர்ட் அதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை வாகன ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம்.

நீங்கள் கேஒய்சி அப்டேட் செய்தது உங்கள் பாஸ்டாகில் வந்திருக்கிறதா என்பதை fastag.ihmcl.com என்ற இணையதளத்தில் சென்று சோதனை செய்து கொள்ளலாம் . இவற்றை சரிபார்க்க நீங்கள் பதிவு செய்திருக்கும் மொபைல் எண்ணை இணையதளத்தில் உள்ளீடு செய்தால் ஓடிபி பாஸ்வேர்ட் வரும் அதனை உள்ளீடு செய்து இணையதள பக்கத்திற்குள் இருக்கும் சுய விவரங்களில் சென்று கேஒய்சி தகவல்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.

English Summary: Feb 29 will be the deadline to complete FASTag KYC. Here is the step by step guidelines to complete your FASTag KYC.

Read More: PM-KISAN YOJANA: விவசாயிகளுக்கு 16-வது தவணை பணம் இன்று வெளியீடு.! இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி.?

Tags :
Advertisement