FASTag பயனர்களே!… KYC புதுப்பிப்பதற்கான காலக்கெடு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கான, FASTag பயன்படுத்துவோர், தங்களது சுயவிபரங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 29ம் தேதிவரை நீட்டித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
ஃபாஸ்ட் டேக் என்பது சுங்கச்சாவடிகளில் காத்திருந்து கட்டணத்தைச் செலுத்தாமல் அதைக் கடக்கும் போது தானாகப் பணம் செலுத்தும் ஒரு வசதியாகும். கடந்த 2021 பிப்ரவரி மாதம் முதல் இந்த பாஸ்ட் டேக் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டன. பாஸ்ட் டேக்குகள் இல்லையென்றால், சுங்கக் கட்டணம் இரட்டிப்பாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டன.
ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் இந்த ஃபாஸ்ட் டேக்குகளை வாங்க முடியும். இரண்டில் எப்படி வாங்கினாலும் கேஒஸ்சி கட்டாயம் தேவை. இந்த ஃபாஸ்ட் டேக்குகளை வாங்வதற்கு காரின் பதிவுச் சான்றிதழ் (RC), அடையாள அட்டை, முகவரி சான்று மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவை தேவைப்படும். ஆனால், பலரும் கேஒய்சி பெறாமல் ஃபாஸ்ட் டேக்குகளை வாங்குகின்றனர். இந்நிலையில், சரிபார்க்காத பாஸ்ட் டேக் கணக்குகளை FASTags செயலிழக்க உள்ளதாக கடந்த ஜன.15ம் தேதி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது.
அதாவது ஜன. 31ஆம் தேதி வரை இதற்கான கேஒய்சி செய்யக் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தநிலையில், தற்போது அந்த காலக்கெடு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலக்கெடுவை பிப்ரவரி 29ம் தேதிவரை நீட்டித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. ‘ஒரு வாகனம், ஒரே ஃபாஸ்டேக்’ என்ற முயற்சியின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிலர் பல வாகனங்களுக்கு ஒரே ஃபாஸ் டேக்கை இணைத்துள்ளனர். சிலர் ஒரே வாகனத்தைப் பல ஃபாஸ்ட் டேக்கை இணைத்துள்ளனர். அந்த முறையை நீக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதாவது ஒரு வாகனத்தில் ஒரே ஒரு பாஸ்ட் டேக் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே இதைச் செய்துள்ளனர்.