For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்..!! ஒரே வாரத்தில் 15 பேர் உயிரிழப்பு..!! குஜராத்தில் அதிர்ச்சி..!!

As the state of Gujarat has received heavy rains for the past few days, the daily life of the people has been severely affected and suffered. Following this, the health department has informed that many people are currently suffering from mysterious fever.
01:25 PM Sep 12, 2024 IST | Chella
வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்     ஒரே வாரத்தில் 15 பேர் உயிரிழப்பு     குஜராத்தில் அதிர்ச்சி
Advertisement

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், மக்களின் அன்றாட வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டு அவதியடைந்தனர். இதைத்தொடர்ந்து, தற்போது பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

குஜராத் மாநிலம் கட்ச் (Kutch) மாவட்டத்தில் உள்ள லக்பத் என்ற தாலுக்காவில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 8 நாட்களில் 15 ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை குழந்தைகள் உட்பட 10 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். மேலும், 48 பேருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் கூறுகையில், "பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 3 சிறப்பு மருத்துவர்களும் எம்பிபிஎஸ் மருத்துவர்கள் தலைமையில் 50 மருத்துவக் குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில், ஜி.கே. பொது மருத்துவமனையில் 100 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளன" என்றுள்ளார்.

கட்ச் மாவட்ட ஆட்சியர் அமித் அரோரா கூறுகையில், "இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் எச்.என். 1, பன்றிக்காய்ச்சல், கிரிமியன் - காங்கோ காய்ச்சல், மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இறந்தவர்களில் 11 பேரின் மாதிரிகள் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளை கொண்டே இது வைரஸ் பாதிப்பா? அல்லது புதிய வகை நோயா என கண்டறிய முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

Read More : வாகன ஓட்டிகளே..!! உடனே நம்பர் பிளேட்டை மாத்துங்க..!! செப்.15-க்கு பிறகு சிக்கனால் அபராதம் தான்..!!

Tags :
Advertisement