முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விவசாயிகளே நாளை தான் கடைசி..!! உடனே விண்ணப்பித்தால் பயிர் காப்பீடு கிடைக்கும்..!!

08:30 AM Nov 21, 2023 IST | 1newsnationuser6
Advertisement

விவசாயிகள் பருவமழை மற்றும் அதிகமான வெயில் உள்ளிட்ட காலநிலை மாற்றங்களால் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நஷ்டத்துக்கு பரிகாரம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது மத்திய அரசு சார்பில் பயிர் காப்பீடு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிர் காப்பீடு என்பது மத்திய வேளாண் துறை அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில் சம்பா, தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15ஆம் தேதி வரை விவசாயிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, இந்த கால அவகாசம் முடியும் கடைசி நாளில் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டது. அதாவது, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் இருப்பது, தீபாவளி பண்டிகை காலம், இணைய சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் பல விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையை எதிர்கொண்டனர்.

இதையடுத்து, பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக வேளாண் ஆணையம் எல்.சுப்பிரமணியன் சார்பில் மத்திய வேளாண் துறைக்கு கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இதனை ஏற்று மத்திய அரசு காப்பீட்டுக்கான தேதியை நீட்டித்தது. அதன்படி, மத்திய வேளாண் அமைச்சகம் பயிர் காப்பீட்டுக்கான காலஅவகாசத்தை வரும் 22ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்து கூடுதல் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டது. இந்த தேதி நீட்டிப்பால் பல விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு செய்தனர். இந்நிலையில் தான் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் விவசாயிகள் அவசரமாக அருகே உள்ள இணைய சேவை மையங்கள் சென்று நாளைக்குள் சம்பா பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
தமிழ்நாடு அரசுபயிர் காப்பீடுமத்திய அரசுவிவசாயம்விவசாயிகள்
Advertisement
Next Article