முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விவசாயிகளே..!! இனி மழை அப்டேட்டை நீங்களே தெரிந்து கொள்ளலாம்..!! இந்திய வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்..!!

08:52 AM Jan 12, 2024 IST | 1newsnationuser6
Advertisement

மாவட்ட வாரியாக மட்டுமே மழை குறித்த அப்டேட் வெளியாகி வரும் நிலையில், இனி பஞ்சாயத்து வாரியாக தெரிந்துகொள்ள முடியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

பருவமழை காலத்தில் எப்போது மழை பெய்யும். கனமழையா? மிதமான மழையா? என்பது குறித்த அப்டேட்களை தினம் தோறும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகினாலும் சரி.. புயல் உருவானாலும் சரி.. வானிலை குறித்த அப்டேட்கள் அவ்வப்போது மக்களுக்கு ஆய்வு மையத்தால் தெரியப்படுத்தப்படும்.

தற்போது சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் வானிலை அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகிறது. மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் காலநிலை மாற்றத்தால் எற்படும் பேரிடர்கள் பெருமளவில் குறைக்கப்படவும் இந்த வானிலை முன்னறிவிப்பு பெரிதும் உதவிகரமாக உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது 150 ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. அதனைக் கொண்டாடும் விதமாக இனி பஞ்சாயத்து அளவிலும் வானிலை முன்னறிவிப்பை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்யவுள்ளது.

இந்த அறிவிப்புகள் ஆங்கிலம், இந்தி தவிர தமிழ் உட்பட 12 இந்திய மொழிகளில் கிடைக்க உள்ளது. நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை செல்போன்கள் மூலமே தெரிந்து கொள்ளலாம். அதற்கு செய்ய வேண்டியது எல்லாம் எந்த ஊருக்கு வானிலை அறிவிப்பை தெரிந்து கொள்ள வேண்டுமோ அதன் பின் கோடு எண்ணை குறிப்பிட்டால் போதுமானது. மழை பற்றிய தகவல் மட்டுமின்றி காற்றின் வேகம் எந்த அளவுக்கு இருக்கும். வெப்ப நிலை, ஈரப்பதம் உள்ளிட்ட விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருதுஞ்சய் மோஹபத்ரா கூறுகையில், ”அடுத்த வாரம் முதல் பஞ்சாயத்து அளவிலான வானிலை முன்னறிவிப்புகளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கவுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். பருவமழை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளை கணிசமாக குறைக்க உதவும். இந்தியாவின் தொழில்நுட்ப வல்லமை மூலம் பஞ்சாயத்து அளவிலான கணிப்புகளையும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடும் ஆற்றல் சாத்தியமாகியுள்ளது” என்றார்.

Tags :
கனமழைகாற்றழுத்த தாழ்வு நிலைபருவமழைவானிலை ஆய்வு மையம்
Advertisement
Next Article