For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டாஸ்மாக் கடைக்கு கொடுக்குற பாதுகாப்பு விவசாயிகளுக்கு இல்லையா?… சீமான் கடும் தாக்கு!

08:18 AM Apr 07, 2024 IST | Kokila
டாஸ்மாக் கடைக்கு கொடுக்குற பாதுகாப்பு விவசாயிகளுக்கு இல்லையா … சீமான் கடும் தாக்கு
Advertisement

Seeman: நாட்டை குட்டிச்சவராக்கும் மதுபானங்களை பாதுகாக்க பாதுகாப்பான கட்டிடம், கண்காணிப்பு கேமிரா என பொருத்தியுள்ள அரசு, விவசாயிகளின் நெல் மூட்டைகளை பாதுகாக்க ஒரு இடம் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அரக்கோணத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அரக்கோணம் தொகுதி வேட்பாளர் அப்சியா நஸ்ரினை ஆதரித்து வாக்கு சேகரித்தார். வரும் லோக்சபா தேர்தலில் 4 கட்சிகள் போட்டியிடுகின்றன. ஏற்கனவே அதிமுக, திமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளுமே பதவி அதிகாரத்தில் இருந்து மக்களை ஆட்சி செய்தவர்கள். ஆனால் அந்த ஆட்சியாளர்கள் அவர்கள் செய்த ஒரு நன்மையை சொல்லி வாக்கு கேட்க முடியவில்லையே?.. 10 ஆண்டுகால ஆட்சி செய்த பாஜக, இந்த பத்து ஆண்டுகளில் இவ்வளவு நலத்திட்டங்களை செய்திருக்கிறோம் என்று சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை.

இவ்வளவு பெரிய நாட்டால் ஒரு தேர்வை கூட நடத்த முடியாவிட்டால் எப்படி?.. இந்திய நாட்டில் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்க நிறுவனம் கடவுளிடம் வேண்டுதல் வைத்ததா? அவர்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் தனியாருக்கு எடுத்து கொடுப்பதற்கே ஒரு அரசு ஒரு அதிகாரம் நிறுவப்படும் என்றால் அப்போது அரசின் வேலை என்ன?.. இந்த கேள்வி உங்களிடம் எழவில்லையா? ஏன் உங்களுக்கு கோபம் வரவில்லை?

கல்வி என்பது மானுட உரிமை அல்லவா?.. அதை பெற்று தருவது அரசின் கடமை அல்லவா?.. ஏன் கொடுக்கவில்லை. மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வேன் என்று சொல்கிறார்கள். கடன் வாங்கி படிக்கும் நிலைக்கு ஏன் தள்ளினீர்கள் என்பதுதான் எங்கள் கேள்வி?.. விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்கிறார்கள்.. ஒரு நாட்டில் விவசாயியே கடனாளி ஆகிவிட்டால், அந்த நாடு எப்படி உறுப்படும் என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.

Readmore: சென்னை ரயிலில் கட்டுக்கட்டாக பணம்!… பாஜக வேட்பாளருக்கு கொண்டு செல்ல முயற்சி!… ரூ.4 கோடி பறிமுதல்!

Advertisement