For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விவசாயிகள் மகிழ்ச்சி..!! நீர்நிலைகளில் இலவசமாக மண் எடுக்க அனுமதி..!! முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவு..!!

Chief Minister M. K. Stalin has given permission to excavate soil from lakes, ponds, ponds and canals free of charge for agricultural use and pot industry.
08:52 AM Jun 13, 2024 IST | Chella
விவசாயிகள் மகிழ்ச்சி     நீர்நிலைகளில் இலவசமாக மண் எடுக்க அனுமதி     முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு
Advertisement

ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களில் இருந்து கட்டணமின்றி, விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் மண் வெட்டி எடுக்க அனுமதி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் பானைத் தொழில் செய்யவும் மண், வண்டல் மண், களிமண் எடுக்க மாவட்ட ஆட்சியர்களால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்ல மழைப்பொழிவால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் நீர் தேங்கி இருந்த நிலையில், மண் எடுக்க முடியாத சூழல் உருவானது. தற்போது நீர் இருப்பு குறைவாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இவற்றை தூர்வாரி, கொள்ளளவை உயர்த்தினால், வரும் மழைக்காலத்தில் அதிக அளவு மழை நீரை சேமிக்க முடியும். தற்போதுள்ள விதிகளில், விவசாய பயன்பாட்டிற்கும், பானைத் தொழில் செய்வதற்கும் அதே கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள கிராமப் பகுதியிலோ உள்ள நீர்நிலைகளில் இருந்து மட்டுமே மண் எடுக்க செய்யப்பட்டுள்ளது.

இதனால், பல தகுதியான பயனாளிகளுக்கு தேவையான மண் கிடைக்காத நிலை உள்ளது. மேலும், மேற்கூறிய பயன்பாடுகளுக்கு அனுமதி பெற சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று, ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று மண் எடுக்க இயலும். இதனால், பயனாளிகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் போது, மேற்கூறிய பிரச்சனைகளையும் களைந்து புதிய எளிதான நடைமுறையை வகுத்திட வேண்டும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், மற்றும் கால்வாய்களிலிருந்து கட்டணம் இல்லாமல் விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் பானைத் தொழில் செய்வதற்கும் மண் எடுக்க சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களே இணைய வழியில் அனுமதி வழங்கும் வகையில் புதிய நடைமுறை செயல்படுத்தப்படும். மேலும், விவசாயிகள் தாம் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்த ஒரு நீர்நிலையிலும் தேவைப்படும் மண்ணை எடுத்துக் கொள்ளவும் இந்த புதிய நடைமுறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement