For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’தமிழனை குடிகாரனாக மாற்றியதே கருணாநிதி தான்’..!! ஹெச்.ராஜா கடும் தாக்கு..!!

Senior BJP leader H. Raja has criticized Kamal Haasan as an inappropriate person in Tamil Nadu politics.
04:43 PM Jun 26, 2024 IST | Chella
’தமிழனை குடிகாரனாக மாற்றியதே கருணாநிதி தான்’     ஹெச் ராஜா கடும் தாக்கு
Advertisement

தமிழ்நாட்டு அரசியலில் பொருத்தமற்ற நபர் கமல்ஹாசன் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

Advertisement

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சியை கொண்டு வந்து அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பாராளுமன்ற நாட்களை நீட்டி சட்டமன்றங்களை செயல்படவிடாமல் செய்து சர்வாதிகார ஆட்சி நடத்தியது காங்கிரஸ். அரசியலமைப்பு சட்டத்தை கொலை செய்தது இந்திரா காந்தி. ஆனால், இன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இருப்பதாக கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் எந்த தலைவர்களையும் பாஜக சிறையில் வைக்கவில்லை. இன்று முழு ஜனநாயகம் உள்ளது.

கொலைகாரர்கள், கொள்ளைகாரர்களின் ஒட்டுமொத்த கும்பல் தான் இண்டியா கூட்டனி. இந்த சர்வாதிகார கும்பலிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாஜகவில் ஜாதி பாகுபாடு இல்லை. திமுக அரசு தீய நோக்கங்கள் கொண்ட அரசாக உள்ளது. கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென தொடர்ந்து நாங்களும் கேட்கிறோம். அதை முதலமைச்சர் ஏற்றுக்கொள்வது தான் அவருக்கு கௌரவம்.

இந்த விவகாரத்தில் சட்டசபையில் எதிர்க்கட்சிகளை வெளிப்படையாக பேச அனுமதிக்க வேண்டும். கமல்ஹாசன் அரசியலில் முக்கியத்துவம் இல்லாத நபராக தமிழ்நாட்டில் இருக்கிறார். அவரின் டார்ச் லைட் தொலைந்து போய்விட்டது. மதுவால் கிடைக்கும் வருமானம் மக்களிடம் இருந்து அடித்துப் பறித்தது தான். தமிழ்நாட்டில் மதுவால் குடும்பங்கள் சீரழிகின்றன. பலர் விதவைகளாகின்றனர். தமிழனை குடிகாரனாக மாற்றியது கருணாநிதி தான். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இருந்து திமுக பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

Read More : ஜூன் 28ஆம் தேதி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விஜய்..!! த.வெ.க. சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்..!!

Tags :
Advertisement