ரசிகர்கள் அதிர்ச்சி..!! வெளிநாட்டிற்கு குடிபெயரும் விராட் கோலி..!! எங்கு தெரியுமா..? உறுதியான தகவல்..!!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் குடிபெயர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விராட் கோலி முன்னணி இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணிக்கு பல முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தந்துள்ளார். உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருடன் விராட் கோலி, சர்வேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார்.
தற்போது ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடி வருகிறார். அதனால், 2 இரண்டு அல்லது 3 ஆண்டுகளுக்குள் அவர் ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவர் ஓய்வுக்கு பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின.
சமீப காலகட்டத்தில் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் நிறைய நாட்களை லண்டனில் செலவிட்டனர். அவர்கள் இருவரும் லண்டனை சுற்றி வந்த ஃபோட்டோக்கள் படு வைரலானது. மேலும், இவர்களின் இரண்டாவது குழந்தையும் லண்டனில் பிறந்தது. இதை வைத்து அவர்கள் இருவரும் லண்டனில் குடியேறுவார்கள் என்றும் சொல்லப்பட்டது. இதுவரை வதந்திகளாக இருந்த அந்த தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், ”ஆம், விராட் தனது குழந்தைகள் மற்றும் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் லண்டனுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அவர், இந்தியாவை விட்டு விரைவில் வெளியேற உள்ளார். கோலி கிரிக்கெட்டைத் தவிர்த்து தனது பெரும்பாலான நேரத்தை குடும்பத்துடன் செலவிடுகிறார். அதனால் இந்த முடிவை எடுத்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.