அதிர்ச்சி..!! புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர் திடீர் மரணம்..!! ரசிகர்கள் இரங்கல்..!!
புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர் காலமானார். அவருக்கு வயது 66.
புகழ்பெற்ற மெக்சிகன் மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. WWE போட்டிகளில் மாமா (அங்கிள்) என்று வாஞ்சையோடு அழைக்கப்படும் இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். இவர் மரணத்திற்கு சரியான காரணம் எதும் வெளியாகவில்லை. உயரம் குறைவானவராக இருந்தாலும், மிகுந்த பராக்கிரமத்துடன் சண்டையிட்டு எதிராளிகளை நிலைகுலைய செய்பவர்.
குறிப்பாக, கயிறுகளுக்கு இடையில் சுழன்று சென்று, எதிராளிகளின் முகத்தில் உதைக்கும் அவரது ஷாட், மிகவும் பிரபலமானதாகும். இந்நிலையில், ரே மிஸ்டீரியோவின் மறைவுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர், மெக்ஸிகோவில் லூச்சா லிப்ரே போட்டிகள் மூலம் புகழ் பெற்றார். உலக மல்யுத்த சங்கம் மற்றும் லுச்சா லிப்ரே AAA போன்ற முக்கிய உலகளாவிய அமைப்புகளின் சாம்பியன்ஷிப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
WWE எனப்படும் வர்த்தக மல்யுத்த போட்டிகள் மூலம், மிஸ்டீரியோவிற்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். முகமூடியை அணிந்தபடி அவர் சண்டையிடுவது பலரது கவனத்தையும் ஈர்த்தது. பலருக்கு ரோல் மாடலாகவும் இருந்தார்.
Read More : வயிற்றில் குழந்தை..!! தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை மூச்சுத்திணற வைத்து கொலை செய்த சித்தி..!!