ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல ”சுந்தரி” சீரியல் நடிகர்..!! திரையுலகினர் அதிர்ச்சி..!! நடந்தது என்ன..?
பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர் ஒரு ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகர் திலீப் சங்கர். இவர், பல பிரபலமான மலையாள சீரியல்களில் நடித்துள்ளார். 'அம்மா இறைத்தே', 'பஞ்சாக்னி', 'சுந்தரி' போன்ற சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் ஹிட் ஆன சுந்தரி சீரியல் கதை, மலையாளத்தில் அதே பெயரில் எடுக்கப்பட்டது. அந்த சீரியலில் திலீப் ஷங்கர் நடித்துள்ளார்.
இந்நிலையில், 'பஞ்சாக்னி' என்ற சீரியலின் படப்பிடிப்புக்காக திலீப் சங்கர் எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்றிருக்கிறார். படப்பிடிப்பு 2 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட, அங்கேயே ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் தான், அவர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களாக அவரை படப்பிடிப்பு குழு அவரை தொடர்பு கொண்டுள்ளது. ஆனால், அவரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஹோட்டல் தரப்பில் விசாரிக்கையில், அவர் 2 நாட்களாக அறையில் இருந்து வெளியேறவில்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில், காவல்துறையினர் தகவல் அறிந்து ஹோட்டலுக்கு விரைந்து, திலீப் சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறப்புக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : இன்று மார்கழி அமாவாசை..!! வீட்டு வாசலில் யாரும் கோலம் போடாதீங்க..!! ஏன் தெரியுமா..?