“எல்லாம் 200 கோடி பணத்திற்காக தான்..” ஸ்ரீதேவியின் மரணம் தெளிவாக திட்டமிடப்பட்ட சதி... பரபரப்பை கிளப்பிய பத்திரிகையாளர்..
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்நடிகை இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இன்னும் சொல்லப்போனால் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்ட முதல் நடிகை ஸ்ரீதேவி தான். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிக பட்டாளத்தை ஸ்ரீதேவி உருவாக்கி வைத்திருந்தார்.
ரஜினி, கமல், என்டிஆர், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா மற்றும் நாகார்ஜுனா என தென்னிந்தியாவின் உச்ச நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் ஸ்ரீதேவி. அதே போல் பாலிவுட்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி அமிதாப் பச்சன், அனில் கபூர், சஞ்சய் தத், ஜித்தேந்திரா என அப்போது உச்சத்தில் இருந்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.
1996-ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை ஸ்ரீதேவி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஜான்பி, குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். இருவருமே இப்போது நடிகைகளாக உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி துபாயில் ஸ்ரீதேவி காலமானார். அவர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் அவர் இறந்து கிடந்ததாக கூறப்பட்டது. எனினும் ஸ்ரீதேவியின் இறப்பில் பல சந்தேகங்கள் இருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. அப்போது முதலே ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்த மற்றொரு அதிர்ச்சி தகவலை பிரபல தெலுங்கு பத்திரிகையாளர் ஏமாண்டி ராமராவ் வெளியிட்டுள்ளார். ஸ்ரீ தேவி மரணம் குறித்து அவர் கூறியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அதாவது, ஸ்ரீதேவியின் மரணம் 200 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவதற்காக திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவி தற்செயலான நீரில் மூழ்கி இறந்தார் என்பதை மறுத்த ராமராவ் அவரது மறைவுக்குப் பின்னால் ஒரு சதித்திட்டம் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். அவரின் இந்த கருத்துகள் சமூக ஊடகங்களில் மீண்டும் விவாதப் பொருளாக மாறி உள்ளது.
ஸ்ரீதேவியின் மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து ராமராவ் கூறிய கருத்து வைரலாகி வரும் நிலையில், சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் அவருக்கு எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர். ஸ்ரீதேவி மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ ராமராவின் கருத்துகள் ஆதாரமற்ற ஊகங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்..