"நான் தான் ஹீரோயின்னு சொல்லி ஏமாத்திட்டாங்க" புலம்பி தள்ளிய குஷ்பூ..
தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் குஷ்பூ. இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தமிழ் சினிமாவின், முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த குஷ்பூ, 90's காலகட்ட இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தார். இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வரும் நிலையில், படங்களை தயாரித்தும் வருகிறார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ரஜினிகாந்துடன் சேர்ந்து அண்ணாத்த படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறும் போது, "முதலில் ரஜினிக்கு ஹீரோயின் என்று சொல்லி தான் என்னையும், நடிகை மீனாவையும் படத்தில் கமிட் செய்தார்கள். மேலும், ஹீரோயின் கதாபாத்திரம் என்று நம்பி தான் நான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால், டப்பிங் பேசும் சமையத்தில், படத்தை முழுமையாக பார்த்த போது தான், நான் ஹீரோயின் இல்லை என்ற உண்மை எனக்கு தெரிய வந்தது.
ஹீரோயின்னு ஏமாற்றி எங்களை காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வச்சுட்டாங்க. கடைசி நேரத்தில் தான் நடிகர் ரஜினிக்கு ஹீரோயின் கிடைச்சுது, அதனால் தான் எங்கள காமெடி ஆக்கிட்டாங்க. அண்ணாத்த படம் பார்த்துட்டு, நிறைய பேரு இந்த படத்துக்கு குஷ்பூ மற்றும் மீனா கதாபாத்திரம் தேவை இல்லாத ஒன்னு என்று சொன்னாங்க. நான் ஹீரோயின் இல்ல, வேறு காமெடி கதாபாத்திரம் தான்னு தெரிஞ்சுருந்தா, நான் கண்டிப்பாக அண்ணாத்த படத்தில் நடித்திருக்கவே மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
Read more: “ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்” கேப்டனை புகழ்ந்து தள்ளிய தயாரிப்பாளர்..