For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"ஒரு நாளைக்கு ஆறு முறை சாப்பிடுவேன்"; நடிகை அனுஷ்கா பகிர்ந்த தகவல்..

actress Anushka reveals her secret of losing weight
08:37 PM Jan 04, 2025 IST | Saranya
 ஒரு நாளைக்கு ஆறு முறை சாப்பிடுவேன்   நடிகை அனுஷ்கா பகிர்ந்த தகவல்
Advertisement

நடிகை அனுஷ்கா, இந்திய திரைப்பட நடிகையான இவர், தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடித்து வருகிறார். 2005-ல், இவர் நாகார்ஜூனாவுடன் சேர்ந்து சூப்பர் எனும் தெலுங்குத் திரைப்படத்தில் நடித்தார். பின்னர் 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து, இவர் தமிழில் அறிமுகமானார். கடந்த பத்து வருடங்களில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர், துவக்கத்தில் ஒரு சராசரி கவர்ச்சி நடிகையாக தான் இருந்தார். ஆனால் அருந்ததி திரைப்படத்தின் மூலம் இவர் தனது நடிப்பை நன்கு வெளிப்படுத்தினார். இந்த படம், இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்தது.

Advertisement

இஞ்சி இடுப்பழகி என்ற ஒரு படத்தில் நடிப்பதற்காக இவர் தனது உடல் எடை கூட்டினார். ஆனால், அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதனால் அவர் படாத பாடுபட்டு தனது உடல் எடையை குறைத்தார். ஆனால் புதுமுக நடிகைகள் பலரின் வருகை, அனுஷ்காவின் மார்க்கெட்டை காலி செய்தது என்று சொல்லலாம். இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். இதனிடையே, அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் உடல் எடை குறைத்தது பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர் கூறும் போது, தான் நிறைய நீர்ச்சத்து உள்ள காய்கறிகளை சாப்பிட்டு, நிறைய நீர் ஆகாரத்தை பிரதான உணவாக எடுத்துக்கொண்டதாக கூறியுள்ளார். மேலும், நாள் ஒன்றுக்கு மூன்று வேளை சாப்பாடு சாப்பிடாமல் ஆறு வேலையாக பிரித்து, குறைந்த அளவில் சாப்பிட்டதாக கூறினார். அது மட்டுமில்லாமல், அவ்வப்போது அவர் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்ததாக தெரிவித்துள்ளார். இதுவே தனது உடல் எடை குறைக்க காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

Read more: “வாங்க டா, நம்ம 3 பேரும் உல்லாசமா இருக்கலாம்” ஆசையாய் அழைத்த நண்பன்; வீட்டில் இருந்த தாய்க்கு நேர்ந்த சோகம்..

Tags :
Advertisement