"நீ மட்டும் கதவை திறக்கலைனா நான் செத்துருவேன்" ஐஸ்வர்யா ராய்க்கு லவ் டார்ச்சர் கொடுத்த பிரபல நடிகர்..
தனது 21 வயதில் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை பெற்றவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். இயக்குனர் மணிரத்னம் இயக்கிய இருவர், என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர், இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம், இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தது. உலக அழகியான ஐஸ்வர்யா ராய் மீது காதல் வரவில்லை என்றால் அது அதிசயம் தான். அந்த வகையில், ஹம் தில் தே சுகே சனம் படத்தில் ஐஸ்வர்யா ராய் உடன் ஜோடியாக நடித்த சல்மான் கானுக்கு, ஐஸ்வர்யா ராய் மீது காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் காதல் ஜோடியாக வளம் வந்த நிலையில், இவர்களின் காதல் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நிலைக்கவில்லை. ஆம், ஐஸ்வர்யா ராயை சல்மான் கான், தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதாவது, தனது அனுமதி இல்லாமல் எந்த படத்திற்கும் கையெழுத்து போடக்கூடாது, யாருடனும் நெருக்கமாக நடிக்கக்கூடாது போன்ற பல கண்டிஷன்களை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த ஐஸ்வர்யா, சல்மான் கானை பார்க்க விருப்பம் இல்லாமல், வீட்டை விட்டு வெளியில் வராமலே இருந்துள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த சல்மான் கான், நள்ளிரவில் ஐஸ்வர்யா ராயின் வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளார். மேலும், கதவை திறக்கவில்லை என்றால், 17வது மாடியில் இருந்த குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். இதனால் பதறிப்போன ஐஸ்வர்யா ராய், கதவை திறந்துள்ளார். மேலும், இதுகுறித்து ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.
Read more: “இதனால் தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை”; கோவை சரளா பகிர்ந்த தகவல்..