For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரபல கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு திருமணம்!. பெண் எம்பியை மணக்கிறார்!. யார் அந்த பிரியா சரோஜ்?

Famous cricketer Rinku Singh is getting married! He is marrying a female MP! Who is Priya Saroj?
06:14 AM Jan 18, 2025 IST | Kokila
பிரபல கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு திருமணம்   பெண் எம்பியை மணக்கிறார்   யார் அந்த பிரியா சரோஜ்
Advertisement

Rinku Singh: பிரபல கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்பி பிரியா சரோஜ் என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.

Advertisement

பிரபல கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் இடம்பெற்று அதிரடி ஆட்டம் மூலம் கவனத்தை ஈர்த்தர். பின்னர் டி20 தொடரில் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் விளையாட உள்ளார். இந்த நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிங்கு சிங். லெப்ட்ஹேண்ட் பேட்ஸ்மேனாக உள்ளார். 27 வயதாகும் ரிங்கு, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்பி பிரியா சரோஜ் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஃபினிஷராக திகழ்பவர் தோனி. தோனியின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணிக்கு அப்படியொரு பினிஷர் இதுவரை கிடைக்கவில்லை என்ற ஏக்கம் இருந்து வந்தது. அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்தவர் ரிங்கு சிங். நெருக்கடியான நேரத்தில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் தேவை என்ற நிலையில் 5 சிக்ஸர்களை அடுத்தடுத்து விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர். கடந்த 2018 ஆம் ஆண்டு, ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான ரிங்கு சிங், தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடிவருகிறார்.

பிரிய சரோஜ் வாரணாசியை சேர்ந்தவர். உத்தரபிரதேசம் மச்லீஸ்வர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பாக எம்பியாக தேர்வு செய்யப்பட்ட அவர், 25 வயதே ஆன இளம் எம்பி என்ற பெருமையை பெற்றவர். மேலும் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருடைய தந்தை தற்போது எம்எல்ஏ ஆக உள்ளார். ஏற்கனவே மூன்று முறை எம்பியாக இருந்தவர். கடந்த 2024ஆம் ஆண்டு, முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பிரியா சரோஜ், பாஜக வேட்பாளர் பி.பி. சரோஜை 35,850 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, நாடாளுமன்ற உறுப்பினரானார். மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இளம் எம்பி என்ற பெருமையும் இவரையே சாரும். டெல்லி பல்கலைக்கழகத்தில் BA பட்டமும், நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் LLB பட்டமும் பெற்றுள்ளார்.

Readmore: இனி போலி அழைப்புகள் மூலம் ஏமாற்ற முடியாது!. விரைவில் காலர் ஐடி அம்சம் அறிமுகம்!. DoT அதிரடி!.

Tags :
Advertisement