"நான் மதம் மாற இதான் காரணம்" பிரபல நடிகை கூறிய காரணம்...
சென்னையைச் சேர்ந்தவரான நடிகை ரெஜினா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர், சிவா மனசுலோ ஸ்ருதி (2012) என்ற தெலுங்கு படத்தில் நடித்து 2012ம் ஆண்டுக்கான சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதைப் பெற்றார். தமிழில் கண்டநாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார். இவர் கடைசியாக, நெஞ்சம் மறப்பதில்லை, கான்ஜூரிங் கண்ணப்பன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்த இவர், சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், அவர் மதம் மாறிய காரணம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது, “என் தந்தை இஸ்லாமியர். ஆனால் என் அம்மா கிறிஸ்துவர். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், நான் சிறு வயது முதல் இஸ்லாமியராகவே வளர்க்கப்பட்டேன். ஆனால் ஒரு கட்டத்தில், எனது பெற்றோருக்கு விவாகரத்தானது. இதனால் இஸ்லாமியராக வளர்ந்த நான், கேசண்ட்ராவை இணைத்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறினேன். அதற்க்கு பிறகு, நான் சர்ச்சில் ஞானஸ்தானம் பெற்றுக்கொண்டேன்” என கூறியுள்ளார்.
Read more: அதிர்ச்சி!!! பள்ளி வளாகத்தில், மாணவனுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை..