செக்..! போலி பத்திரப்பதிவு... 21-ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை...!
போலி பத்திரப்பதிவை தடுக்கும் நோக்கில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் மூலம் ஆவணதாரர்களின் விரல் ரேகையை சேமிக்க வேண்டி இருப்பதால் ஆதார் ஆணையத்தின் நடைமுறையை பின்பற்றி சார்பதிவாளர் அலுவலகங்களில் புதிய கருவி பயன்படுத்தப்படுகிறது இந்த நடைமுறை வரும் 21ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்; ஆதார் ஆணைய அறிவுரைகளின் படி கூடுதல் பாதுகாப்பு காரணங்களுக்காக L1 Finger Print Device-களை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆதார் ஆணையம் LO Finger Print Device-ன் பயன்பாட்டை 30.09.2024 நிறுத்திக்கொள்வதாக அறிவுறுத்தியுள்ளது. மேலும், 01.10.2024 முதல் L1 Finger Print Device மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஆவணதாரர்களை ஆதார் வழி அடையாளம் காண புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக அனைத்து அலுவலகங்களிலும் தற்போது "ஒப்புதலுடன் கூடிய ஆதார் அங்கீகாரம்" என்ற நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது ஆதார் வழி ஆவணதாரர்களை அடையாளம் காண "Mantra MFS 100" (LO Finger print Device) στο பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளவாறு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட L1 Finger print Device-களை மட்டுமே 01.10.2024 முதல் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி, நமது துறையில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் "Mantra MFS 110" என்ற L1 Finger print Device திருவாளர்கள் எல்காட் நிறுவனம் வழி முன்பே வழங்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறை சட்டத்திற்கு ஏற்ப ஆவணதாரர்களின் விரல் ரேகையை சேமித்து வைக்க வேண்டியிருப்பதாலும், L1 Finger Print Device களைப் பொருத்து விரல் ரேகையை சேமிக்க இயலாது என்பதாலும் Lo - Finger Print Device ஆவணதாரர்களின் கைரேகையை சேமிப்பதற்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் இரண்டு விரல் ரேகை கருவிகளையும் (LO மற்றும் L1) பயன்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே, இனிவரும் காலங்களில் ஆவணதாரர்களை அடையாளம் காண ஸ்டார் 2.0 மென்பொருளில் புதிய விரல் ரேகை கருவியினை பயன்படுத்துவதற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு கீழ்க்கண்டவாறு செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.
ஆவணதாரர் விரல் ரேகையை முதலில் L1 Finger print Device(Mantra MFS 110)-ல் பதிக்க வேண்டும். (இரண்டு கருவிகள் இருப்பதால் இதனை எளிதாக அறிந்துக் கொள்ளும் வகையில் இந்த கருவியில் "முதலாவது/First" என்று எழுதி ஒட்டிக்கொள்ளலாம்) ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு ஸ்டார் 2.0 மென்பொருள் "சரி/தவறு" என்ற தகவலைத் தரும். தற்போதைய நடைமுறைப்படி விரல் ரேகை பொருந்தாத நிலையில் "கருவிழிப்படல வருடி(Iris Scanner)" வழியாக அடையாளத்தை சரிபார்க்க வேண்டும். கருவிழிப் படல வருடி கருவியைப் பொறுத்து தற்போது பயன்பாட்டில் உள்ள கருவியையே பயன்படுத்தலாம்.