அன்று கேப்டனாக தோல்வி.. இன்று பயிற்சியாளராக வெற்றி!! - ராகுல் டிராவிட் உருக்கம்!!
2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் உள்ள பார்படாஸில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதில், ஏற்பட்ட விரக்தி மற்றும் விமர்சனக் கனைகளால்
கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு பெற்றார் ராகுல் டிராவிட். ஆனால், வீரராக விடைப்பெற்ற மண்ணிலேயே பயிற்சியாளராக இந்திய அணிக்கு கோப்பை வென்றுக் கொடுத்து தனது கனவை நிறைவேற்றிக் கொண்டார் ராகுல் டிராவிட்.
11 வருடங்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தொடரை டி20 உலகக் கோப்பை மூலமாக வென்று இந்த ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இது குறித்து அவர் கூறும்பொழுது “இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பான திறமைகள் நிறைய உள்ளன. வீரர்களின் தன்னம்பிக்கையும், ஆற்றலும் நிறையவே இருக்கிறது. இந்திய அணி அடுத்த ஐந்து ஆறு ஆண்டுகளில் பல கோப்பைகளை வெல்லும். இது ஒரு இரண்டு வருட பயணம். 2021ஆம் ஆண்டில் இருந்தே இந்திய அணியின் கட்டுமானம், வீரர்களின் திறன், மற்றும் நாங்கள் விரும்பிய வீரர்கள் குறித்து விவாதித்தோம். இந்த இரண்டு வருட பயணத்தில்தான் தற்போது உலகக் கோப்பை எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
ஒரு வீரராக உலகக் கோப்பையை வெல்ல எனக்கு அதிர்ஷ்டம் இல்லை ஆனாலும் அப்போது என்னால் முடிந்தவற்றை அணிக்காக கொடுத்தேன். ஒரு அணிக்காக நான் பயிற்சியாளராக செயல்பட்டதில் ஒரு அதிர்ஷ்டசாலி. இந்த வீரர்கள் கூட்டம் அதை எனக்கு வென்று கொடுத்ததில் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இது ஒரு மிகச் சிறப்பான உணர்வு. ஒரு பயிற்சியாளராக எனது வேலையை சரியாக செய்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
Read more ; IAS அதிகாரியின் சம்பளம் எவ்வளவு? அவருக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகிறது தெரியுமா?