உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது பட்டாசு வெடிக்க அதிரடி தடை..!! ரசிகர்கள் ஏமாற்றம்..!!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது மும்பை, டெல்லியில் பட்டாசு வெடிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. காற்று மாசு காரணமாக இந்த இரு நகரங்களிலும் எஞ்சிய போட்டிகளின் போது வான வேடிக்கை நிகழ்த்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் (நவம்பர் 7), முதல் அரை இறுதி ஆட்டமும் (நவம்பர் 15) அங்கு நடக்கிறது. டெல்லியில் ஒரே ஒரு ஆட்டம் நடைபெற உள்ளது. இலங்கை - வங்காளதேசம் அணிகள் வரும் 6ஆம் தேதி அங்கு மோதுகின்றன.
இந்நிலையில், "சுற்றுச்சூழல் கவலைகளுக்கு பிசிசிஐ உணர்திறன் கொண்டது. இந்த விஷயத்தை நான் ஐசிசியிடம் முறைப்படி எடுத்துக் கொண்டேன். மும்பையில் பட்டாசு வெடிக்க முடியாது, இது மாசு அளவை அதிகரிக்கும்" என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
"சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதற்கு வாரியம் உறுதி பூண்டுள்ளது, மேலும் எங்கள் ரசிகர்கள் மற்றும் பங்குதாரர்களின் நலன்களை எப்போதும் முன்னணியில் வைக்கும். மும்பை மற்றும் டெல்லி ஆகிய இரு நகரங்களிலும் காற்றின் தரம் தொடர்பான அவசர அக்கறையை பிசிசிஐ ஒப்புக்கொள்கிறது” என்றும் தெரிவித்தார்.