For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகமே...! இந்த 25 சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பதில் இருந்து விலக்கு...! தமிழக அரசு குட் நியூஸ்...!

Exemption from charging GST for 25 services
05:36 AM Nov 05, 2024 IST | Vignesh
தமிழகமே     இந்த 25 சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பதில் இருந்து விலக்கு     தமிழக அரசு குட் நியூஸ்
Advertisement

மின்கட்டண விகிதம் மாற்றம் உள்ளிட்ட 25 சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இரு மாதங்களுக்கு பதிலாக மாதம் ஒருமுறை மின்சாரப் பயன்பாட்டை கணக்கெடுக்கும் முறையை அறிமுகம் செய்வோம் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதியை செயல்படுத்தவில்லை. அதுகுறித்து கேட்கும் போதெல்லாம், மாதந்தோறும் மின்சாரப் பயன்பாட்டை கணக்கிட போதிய பணியாளர்கள் இல்லை என்று கூறி வந்தது.

Advertisement

தமிழ்நாடு மின்வாரியம் புதிய மின்இணைப்புகளை வழங்கும்போது விண்ணப்பக் கட்டணம், வளர்ச்சிக் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருமுறை செலுத்தக் கூடிய கட்டணத்தை வசூலித்து வருகிறது. மேலும், வீடுகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் மின்பயன்பாட்டுக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின்சாதனம் இடம்மாற்றம் உள்ளிட்ட பல சேவைகளுக்கு தனித்தனியே கட்டணம் வசூலிக்கிறது. இதில், மின் பயன்பாட்டு கட்டணத்துக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி கிடையாது. அதேசமயம், மின்சார சேவைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை மின்வாரியம் வசூலிக்கிறது.

இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையை ஏற்று விண்ணப்பக் கட்டணம், மின்சாதனம் இடமாற்றம், மீட்டர் வாடகை, எரிந்த மீட்டரை மாற்றுவது, மின் இணைப்பு பெயர் மாற்றம், மின்கட்டண விகிதம் மாற்றம் உள்ளிட்ட 25 சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த மாதம்10-ம் தேதி முதல் முன்கூட்டியே அமலுக்கு வருவதாக மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement