முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2,676 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவுகள் வெளியீடு...!

Exam results for filling 2,676 vacancies
05:55 AM Sep 22, 2024 IST | Vignesh
Advertisement

2,676 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; சென்னை பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பல்வேறு பதவிகளில் 2,676 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தால் கடந்த ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 6 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

Advertisement

எழுத்துத் தேர்வு மதிப்பெண்அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் https://tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணலுக்கான அழைப்புக் கடிதத்தை மேற்கூறிய இணையதளத்தில் 26-ம் தேதி முதல் தேர்வர்கள் தங்களின் லாக்-இன் ஐடி பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
exam resultJob notificationtn government
Advertisement
Next Article