புது வருடம்.! புது ஸ்கெட்ச்.! தர்மயுத்த நாயகனின் மாஸ்டர் பிளான்.! பிரதமருக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்.!
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். இவர் அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளராகவும் பதவி வகித்து வந்தார். திரு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது துணை முதல்வராக பணியாற்றிய ஓபிஎஸ் தற்போது அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும் கட்சியின் சின்னங்கள் மற்றும் கொடி ஆகியவற்றை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தின் மூலம் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
வருகின்ற புத்தாண்டில் புது தெம்புடன் இழந்த பதவிகளை மீட்பதற்காக புதிய ரூட்டில் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் தனது ஆதரவாளர்களுடன் தன்னுடைய பதவி நீக்கத்திற்கு எதிராக நியாயம் கேட்டு சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டை என்று அழைக்கப்படும் கோவையில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்த ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்காக பிரதமர் மோடிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் கணித எழுதி இருக்கிறார். மேலும் அந்த கடிதத்தில் தனது ஆதரவு எப்போதும் பாரதிய ஜனதா கட்சிக்கு உண்டு என்று தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் இணைந்து பயணிக்க விருப்பம் தெரிவித்து அனுப்பப்பட்ட தூது தான் அந்தக் கடிதம் என சில பாஜக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.