எல்லாமே கழிவுகள்தான்!… உலக அதிசயங்களில் இப்படியொரு ஆச்சரியமா?
நாம் வாழும் உலகத்தில் பல உலக அதிசயங்கள் காணப்படுகின்றன. உலகின் 7 அதிசயங்களாக பைசா சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிசின் ஈஃபிள் டவர், சீனப்பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசீயும், அமெரிக்காவின் எம்பெயர் ஸ்டேட் கட்டிடம் ஆகியவை அறியப்படுகின்றன. இங்குள்ள உலக அதிசயங்களின் உருவாக்கத்தில் கழிவுப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?... இது பற்றிய தொகுப்பு இதோ.
நீண்ட காலமாக உலகின் மிக உயரமான சிலையாக கருதப்படும் சுதந்திர தேவி சிலை 137 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் ‘ஒற்றுமை சிலை ’ உலகிலேயே மிக உயரமான சிலையாக மாறியுள்ளது. ஆனால் அதற்கு முன்பு வரை, இந்த பெருமை சுதந்திர தேவி சிலைக்கே இருந்தது. சுதந்திர தேவி சிலை மிகவும் சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டனில் உள்ள லிபர்ட்டி தீவில் உள்ள 'சுதந்திர சிலை' அக்டோபர் 28, 1886 அன்று அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி க்ரோவர் கிளீவ்லேண்டால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலை அமெரிக்காவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான நட்புறவின் சின்னமாகும்.
இந்த சிலை 7-8 டன் கழிவு பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 35 அடி உயரம் கொண்ட இதன் பீடம் செங்கற்களின் தோற்றத்தில் காட்சியளித்தாலும் அதனை உருவாக்குவதற்கு பழைய பைப்புகள், உலோக துண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திர தேவியின் தலையை அலங்கரித்திருக்கும் கிரீடம் கார் ரிம்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர தேவியின் வலது கையில் இடம்பெற்றிருக்கும் சுடர் ஜோதி, பழைய பைக் மற்றும் செயினால் ஆனது. தலைமுடி சுருளையும் பைக் செயின்தான் அலங்கரித்திருக்கிறது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரியோவில் அமைந்துள்ள 'கிறிஸ்ட் தி ரிடீமர்' (Christ the redeemer) அல்லது மீட்பராகிய கிறிஸ்து சிலைப் பற்றி ஏறக்குறைய நாம் எல்லோருமே அறிந்திருப்போம். ஆனால் இன்றைய தேதிக்கு இது தான் "டாக் ஆப் தி டவுன்", ஆம்! சமீபத்தில் இந்த 100 அடி உயரமுள்ள இயேசு கிறிஸ்துவின் சிலை மின்னலால் தாக்கப்பட்டபோது, கிட்டத்தட்ட சாத்தியமற்ற சாதனையாக, ஒரு அதிர்ச்சியூட்டும் புகைப்படம் கைப்பற்றப்பட்டது. அது பார்ப்பதற்கு மின்னல் என்னவோ இயேசுவின் கண்களில் இருந்து வானுக்கு செல்வது போன்று தெரிகிறது. இது தெய்வீக காட்சி என்று பலர் இதனை வியந்து பார்த்தனர்.
சுமார் 25 அடி பீடம் செய்வதற்கு பூங்காக்களில் நிறுவப்படும் பழைய பெஞ்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பீடத்தின் மீது செங்குத்தாக மின் கம்பங்கள் நிறுவப்பட்டு சிலை உருவாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக் கிளின் என்ஜின் பகுதி கைகள் உருவாக்குவதற்கும், செயின் தலைமுடி வடிவமைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 4-5 டன் கழிவுகள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஈபிள் டவர் உள்ளது. 1889-ம் ஆண்டு பாரிஸில் நடந்த உலக கண்காட்சியை பிரமாண்டப்படுத்தவே, ஈபிள் டவரை கட்டமைக்கப்பட்டது. கஸ்டவ் ஈபிள் என்பவர் கட்டமைத்ததால், அவரது பெயரிலேயே இந்த கோபுரம் அழைக்கப்படுகிறது. இது 1050 அடி உயரம் கொண்டது. ஈபிள் டவரில் மொத்தம் 1,665 படிகள் இருக்கின்றன. ஈபிள் டவரில் உபயோகிக்கப்பட்ட பெயிண்ட்டின் எடை பத்து யானைகளின் எடைக்கு சமமாம். இதுவரை 250 மில்லியன் மக்கள் ஈபிள் டவரில் ஏறி ரசித்திருக்கிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் உயரம் ஆட்டோமொபைல் கழிவு பொருட்களால் உருவானது. லாரிகளின் உதிரி பாகங்கள், கிளட்ச் பிளேட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேல்புற மாடி பகுதிகள் கிரேன் உதவியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதிலும் சுமார் 40 டன் அளவிலான கழிவுப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பல பாரம்பரிய, கலாச்சார, இயற்கை சுற்றுலாத் தலங்கள் உலகெங்கிலும் இருந்தாலும், அன்பு மற்றும் காதலின் வெளிப்பாட்டால் கட்டப்பட்ட இந்தியாவின் தாஜ்மஹால் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் விட விசேஷமானது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்டிற்கு 8 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் தாஜ்மஹால் 'உலகின் மிகவும் இன்ஸ்டாகிராம் செய்யப்பட்ட கலாச்சார பாரம்பரிய தளமாக' இப்போது மாறியுள்ளது!
32 மில்லியன் ரூபாய் செலவில், 1632-1653 ஆண்டு கால கட்டத்தில், நுட்பமான வேலைகளை கொண்டு கட்டப்பட்ட தாஜ்மஹால் இன்றளவும் கம்பீரமாக நிற்கிறது. பல சிறப்புகள் அடங்கிய தாஜ்மஹால் 2007 ஆம் ஆண்டில் 100 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளுடன் உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இடம் பிடித்தது. தாஜ்மஹாலின் இந்த அழகிய அமைப்புக்கு 1600 சைக்கிள் வளையங்கள், மின் கம்ப குழாய்கள், பூங்கா பெஞ்சுகள், ஊஞ்சல், லாரி ஸ்பிரிங்ஸ் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு குழாய்களைப் பயன்படுத்தி குவிமாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பெஞ்சுகளை பயன்படுத்தி ஜன்னல், கதவு சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் 30 டன் அளவிலான கழிவுப்பொருட்கள் பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.
இத்தாலியின் தலைநகரமான ரோமில் அமைந்துள்ள கொலோசியம் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும். கிளாடியேட்டர் விளையாட்டுகள் போன்ற நிகழ்வுகளை நடத்திய இந்த பெரிய ஆம்பிதியேட்டர் கிட்டத்தட்ட 1900 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டாலும் இன்றளவும் உலக அதிசயமாக நின்று பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. 15 அடி உயரம் கொண்ட இதற்கு மின்சார கம்பங்கள், உலோக தளவாடங்கள், பெஞ்ச், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், கார் சக்கரங்கள் பயன்படுத்தி இந்த கொலோசியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 11 டன் கழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலியின் போலோக்னா நகரின் முக்கிய அடையாளமாக திகழும் கரிசெண்டா சாய்ந்த கோபுரம் 900 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. வானளாவ நிமிர்ந்து நின்ற இந்த கோபுரம், கடந்த சில ஆண்டுகளாக, படிப்படியாக சாயத் தொடங்கியது. இந்த ஐகானிக் கட்டிடத்தின் முதல் கல் ஆகஸ்ட் 9, 1173 அன்று நாட்டப்பட்டது. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக கவுரவிக்கப்பட்ட இந்த கோபுரம் உலகெங்கிலும் உள்ள மக்களிடையே பிரமிப்பையும் ஆர்வத்தையும் தூண்டுகிறது.
இது வழக்கமான கட்டிடங்களைப் போல நேராக நிற்காது. பல நூற்றாண்டுகளாக அதன் அடித்தளம், மென்மையான மண்ணில் மூழ்கியதன் விளைவாக அது ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த தனித்துவமான சாய்வு தான், புவியீர்ப்பு விசையை மீறி, கோபுரத்தின் வளமான வரலாற்றில் ஒரு புதிரை சேர்க்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. 8 மாடிகளை கொண்ட சாய்ந்த கோபுரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 211 ஆர்ச்சுகள் இடம்பெற்றிருக்கிறது. பிளாஸ்டிக் குழாய்கள், சைக்கிள் சக்கரங்கள், மெட்டல் ஷீட்டுகள் கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. 10.5 டன் கழிவு பொருட்களை கொண்டு இந்த கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது.
பண்டை காலத்து எகிப்தியர்களிடம் இறந்தவர்கள் உயிருடன் வருவார்கள் என்ற தீவிர நம்பிக்கை இருந்தது. இதனால், இறந்தவர்களின் உடலின் முக்கிய பாகங்களை குடுவையில் அடைத்து அவர்களது உடலை வாசனை திரவியத்தால் பதப்படுத்தி பிரமிடுகளில் புதைக்கும் பழக்கம் இருந்தது. இதனாலேயே பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் எகிப்தின் பிரமாண்ட பிரமிடான கிசா கிரேட் பிரமிடு குறித்த ஆச்சரியமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும். சுமார் 18 அடி கொண்ட உலகின் ஏழு அதிசயங்களில் மிகப்பழமையான இது, 10,800 வளைந்த தகடுகளை பயன்படுத்தி 110 அடுக்குகளாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 10-12 டன் கழிவுப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.