நீங்கள் இதை மட்டும் செய்தால் போதும்..!! வீடு, கார் எல்லாமே இலவசம்..!! இது எங்க இருக்கு தெரியுமா..?
ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் தனிப்பட்ட ஒரு வில்லா, ஒரு கார், குறைந்தது ரூ.15 லட்சம் பேங்க் பேலன்ஸ் வைத்திருக்கின்றனர். அந்த கிராமத்திற்கு செல்லும் மக்களுக்கு இது இலவசமாக வழங்கப்படுகிறது. அப்படியான கிராமம் எங்கே இருக்கிறது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜியாங்யின் கவுண்டியில் உள்ள ஹுவாக்ஸி Huaxi கிராமம் தான் பணக்கார கிராமமாக கருதப்படுகிறது. இந்த கிராமத்தில் 2009 வரை, ஒவ்வொரு குடும்பமும் ஒரு வீடு மற்றும் குறைந்தபட்சம் ஒரு கார், $150,000 மதிப்பில் பணம் என இந்த கிராம சமூகத்தால் வழங்கப்பட்ட சொத்துக்களை கொண்டிருந்தனர். இந்த கிராமம் முழுவதுமே பழங்கள் தரும் மரங்களால் சூழப்பட்டுள்ளன. அதன் இடையே சிவப்பு-கூரை வில்லாக்கள், அழகுபடுத்தப்பட்ட புல்வெளிகள் மற்றும் 2 கார் கேரேஜ்கள் கொண்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, Huaxi ஒரு "முன்மாதிரி சோசலிச கிராமம்" ஆகும். இது 1961இல் உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் Wu Renbao என்பவரால் நிறுவப்பட்டது. அவரது தொலைநோக்கு பார்வையே, ஒரு ஏழை விவசாய சமூகத்தை பணக்கார சமூகமாக மாற்றுவது தான். அதனடிப்படையில், விவசாயம், வணிகம், தொழில்துறை என அனைத்தும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இங்கிருந்து சீன நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு லாபம் ஈட்டி தருகிறது இந்த கிராமம். 400 குடும்பங்கள் வாழும் இந்த கிராமத்திற்கு புதிதாக குடியேறும் மக்களுக்கு ஐரோப்பிய பாணி வில்லா, கார், வேலை எல்லாமே இலவசம் தான். மேலும், வளர்ந்த நாடுகளில் இருப்பது போல கல்வி, மருத்துவ வசதி, சுகாதார வசதிகள், போக்குவரத்தும் இலவசம். ஆனால், இந்த வசதிகள் எல்லாம் இங்கு இருக்கும் வரை மட்டுமே அனுபவிக்க முடியும். இந்த கிராமத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில், அனைத்தையும் கிராம நிர்வாகத்திடம் கொடுத்துவிட வேண்டும்.
Read More : மச்சினிச்சியுடன் மஜா செய்த ஆட்டோ ஓட்டுநர்..!! 10 வயது மகளையும் விட்டு வைக்கல..!! கன்னியாகுமரியை அதிரவைத்த சம்பவம்..!!