”எல்லாம் பணத்திற்காக”..!! கிரிக்கெட் வீரர் சாஹல் விவாகரத்து..? ரூ.20 கோடி டிமாண்ட் வைக்கும் மனைவி தனஸ்ரீ..?
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளராக இடம்பெற்று வந்த யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், தனஸ்ரீ சாஹலிடம் இருந்து எவ்வளவு ஜீவனாம்சம் பெறுவார் என்ற கேள்வி தற்போது பலருக்கும் எழுந்துள்ளது.
2020ஆம் ஆண்டு முதல் சாஹல் மற்றும் தனஸ்ரீ திருமண உறவில் இருந்து வந்தனர். இதனால் 5 வருடத்திற்கும் குறைவாக இருப்பதால், ஜீவனாம்சம் குறைவாகவே இருக்கும். இந்த சாஹல் வழக்கில், சஹால் தனிப்பட்ட வகையில் மிகப்பெரிய கோடீஸ்வரர். அதேபோல் தனஸ்ரீ தனியாக டான்ஸ் கிளாஸ் நடத்துகிறார். இதனால் அவரும் வருமானம் ஈட்டுகிறார்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதன் காரணமாக அலிமோனி அதிகமாக கொடுக்க வேண்டியிருக்காது. ஆனால் சாஹல் கோடீஸ்வரர் என்பதால் அதை அடிப்படையாக் வைத்து அலிமோனி கேட்க வாய்ப்பு உள்ளது. அதிகபட்சம் ரூ.20 கோடி வரை தனஸ்ரீ கேட்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரே பேமெண்ட்டாக கேட்க வாய்ப்புகள் உள்ளன. இந்த வழக்கில் சாஹல் மீது வைக்கப்படும் புகார்கள் அடிப்படையில் அல்லது தனஸ்ரீ வைக்கப்படும் புகார்கள் அடிப்படையில் ஜீவனாம்சம் குறைக்கப்படலாம் அல்லது உயர்த்தப்படலாம்.
ஏற்கனவே தனஸ்ரீ - ஷ்ரேயாஸ் ஐயர் இடையே நட்பு நெருக்கமாக இருப்பதாக புகார்கள் வைக்கப்பட்டன. இப்படிப்பட்ட நிலையில்தான் வேறு ஒரு இளைஞரை தனஸ்ரீ டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனஸ்ரீ சாஹலுடன் இருந்தது பணத்திற்காக மட்டுமே என்று நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.