For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்றும் எங்கள் பக்கம் கேமரா திரும்பல.. சட்டமன்றம் உங்களின் பொதுக்கூட்ட மேடை அல்ல முதல்வரே..!! - EPS

Even today the camera does not turn towards us.. Legislative Assembly is not your platform Chief Minister..!! - EPS
11:04 AM Jan 09, 2025 IST | Mari Thangam
இன்றும் எங்கள் பக்கம் கேமரா திரும்பல   சட்டமன்றம் உங்களின் பொதுக்கூட்ட மேடை அல்ல முதல்வரே       eps
Advertisement

பரபரப்பான அரசியல் சூழலில் நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நாங்காம் நாள் கூட்டம் தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்க்கேற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றும் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்திருந்தனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன் கொடுமை சம்பவத்தை கண்டித்து யார் அந்த சார் என்ற பேர்ஜூடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவியக்கு வருகை தந்தனர். இந்த நிலையில் இன்றும் சட்டப்பேரவை நேரலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை காட்ட வில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை? சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை. எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா ஸ்டாலின் அவர்களே? எதற்காக இவ்வளவு அஞ்சி நடுங்குகிறீர்கள்?

"யார் அந்த SIR?" என்ற நீதிக்கான கேள்வி உங்களை அவ்வளவு உறுத்துகிறது என்றால், மீண்டும் கேட்கிறேன் , யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு? மக்கள் நலனுக்கான, எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் மாடல் அரசு எத்தனிப்பது ஜனநாயகப் படுகொலை! தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை, எந்தவித ஒளிவு மறைவுமின்றி, முழுமையாக, மக்களின் குரலான எதிர்க்கட்சியின் கருத்துக்களை மக்களுக்கு நேரடி ஒளிபரப்ப வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு சட்டமன்றம், பொதுமக்களின் தேவையை சபையேற்றி, சட்டமியற்றி, திட்டமியற்றி செயல்படும் தமிழக மக்களின் மேடை; திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல!

Read more ; திருப்பதியை உலுக்கிய கோர சம்பவம்.. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடந்தது என்ன? 

Tags :
Advertisement