முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”நீங்கள் சமைக்கும்போது செய்யும் தவறுகள் கூட நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம்”..!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

Medical research has revealed that the way food is cooked is also a major cause of diabetes.
04:34 PM Nov 08, 2024 IST | Chella
Advertisement

உணவுகளை சமைக்கும் முறையும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக இருப்பது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. உணவை வறுத்தல், வாட்டுதல் போன்ற முறைகளில் தயாரிக்கும் போது கிளைகேஷன் என்ற ரசாயன உப பொருட்கள் உருவாகிறது. இது நீரிழிவு நோய்க்கு காரணமாவது தெரியவந்துள்ளது. வறுத்தல் முறையில் தயாரிக்கப்படும் சிப்ஸ்கள், ஃப்ரைடு சிக்கன் மற்றும் கேக்குகள், பிஸ்கட்டுகள், தயார் நிலை உணவுகளில் ADVANCED GLICATION END PRODUCTS எனப்படும் ரசாயனம் அதிகம் இருக்கிறது.

Advertisement

அதே நேரம் வேக வைக்கப்பட்ட, ஆவி மூலம் சமைக்கப்பட்ட உணவுகளில் இந்த ரசாயனம் இருப்பதில்லை என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. பழங்கள், முழு தானியங்கள், ஆவியில் வேக வைக்கப்பட்ட உணவுகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் சென்னை நீரிழிவு ஆராய்ச்சி மையமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

உடல் பருமன் மிகுந்த 38 பேரை 12 வாரங்களுக்கு வெவ்வேறு உணவு வகைகளை வழங்கி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியர்களை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சனையாக நீரிழிவு நோய் உருவாகி வரும் நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Read More : அடுத்த 48 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! தமிழ்நாட்டில் மழை எப்படி இருக்கும்..?

Tags :
ஆய்வு முடிவுகள்உணவுகள்நீரிழிவு நோய்
Advertisement
Next Article