முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’இனி 5 சர்வீஸ் இருந்தாலும் ஒன்றுக்கு மட்டுமே 100 யூனிட் மின்சாரம் இலவசம்’..!! தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி..!!

08:29 AM May 17, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் வீடுகள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்திற்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலமே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதில் குடியிருப்புகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதேபோல நெசவாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, குடிசை வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர முதல் 100 யூனிட் மின்சாரம் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், ஒரே முகவரியில் ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை கணினி வழியாக மெர்ஜிங் செய்ய மின்வாரியம் வாய்மொழி உத்தரவிட்டுள்ளது. தற்போது ஒரு வீட்டில் 5 சர்வீஸ் லைன் இருந்தாலும், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், அதை மெர்ஜிங் செய்வதால், 5 இணைப்பு இருந்தாலும், அதில் ஒன்றுக்கு மட்டுமே 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த முடிவுக்கு மின்வாரிய ஊழியர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

Read More : ’இனி கரண்ட் பில் பிரச்சனையே வராது’..!! ரூ.75,000 மானியம்..!! மின்சாரத்தை விற்றும் லாபம் பார்க்கலாம்..!! எப்படி தெரியுமா..?

Advertisement
Next Article