முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”உலகமே நம்மை பாராட்டினாலும் திட்டுவதற்கு 4 பேர் இருப்பார்கள்”..!! தமிழ்நாடு அரசை பாராட்டிய வடிவேலு..!!

04:37 PM Dec 21, 2023 IST | 1newsnationuser6
Advertisement

பசுமை சைதை திட்டத்தின் கீழ், மிக்ஜாம் புயலால் வீழ்ந்த மரங்களை ஈடு செய்யும் வகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் சைதாப்பேட்டை தொகுயில் 5,000 மரங்களை நடும் நிகழ்ச்சி சைதாப்பேட்டை தாடண்டர் நகரிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு மரத்தினை நட்டு துவக்கி வைத்தார்.

Advertisement

தொடர்ந்து மேடையில் பேசிய அவர், ”தமிழ்நாடு அரசு பல சோதனைகளை சந்திக்கிறது எனவும் சென்னையில் புயலை அரசியலாக்கிவிட்டார்கள் எனவும் தெரிவித்தார். ஆனால், தென்மாவட்ட மழையில் அவ்வாறு செய்ய இயலவில்லை என குறிப்பிட்டார். இயக்குனர் மாரிசெல்வராஜ் ஏன் அங்கு செல்கிறார் என சிலர் கேட்கிறார்கள். அது அவருடைய ஊர் அவர் செல்லாமல் எப்படி இருப்பார்? மழை பெய்துக்கொண்டிருக்கும் போது தமிழ்நாடு அரசு சிறப்பான பணிகளை செய்து வருகிறது” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, ”உலகமே நம்மை பாராட்டினாலும் நம்மை திட்டுவதற்கு 4 பேர் இருப்பார்கள். அதுபோலத்தான் இதுவும் திட்டுபவர்கள் திட்டிக் கொண்டே இருக்கட்டும் அரசாங்கம் தன் கடமையை சிறப்பாக செய்யும்” என குறிப்பிட்டார்.

Tags :
அமைச்சர் மா.சுப்பிரமணியன்தமிழ்நாடு அரசுநடிகர் வடிவேலுமிக்ஜாம் புயல்
Advertisement
Next Article