”கல்யாணம் ஆகியும் அடங்கல”..!! தங்கைக்கு அடிக்கடி தொல்லை..!! கொலை செய்து கடலில் தூக்கிப் போட்ட கொடூரம்..!!
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மரக்காயர்தோப்பு வீதியைச் சேர்ந்தவர் சிவா (23). இவர், புதுச்சேரியில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கடந்த 8ஆம் தேதி புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் படுகாயத்துடன் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் ஆகி மனைவி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த சிவா, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் அண்ணன், சிவாவை கண்டித்ததோடு அதே பகுதியைச் சேர்ந்த ஷேக் இஸ்மாயில் மகன் அப்துல் சலாம் (வயது 19) என்பவரிடம் சிவாவை கண்டிக்கும்படி கூறியுள்ளார். அப்துல் சலாம் தனது நண்பர்களுடன் சென்று சிவாவை கண்டித்துள்ளார். அப்போது, இரு தரப்பில் பிரச்சனை ஏற்பட்டிருந்தது.
அப்போது சிவா அப்துல் சலாமை தாக்கியுள்ளார். இதனால் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சிவாவை சந்தர்ப்பம் கிடைக்கும் போது கொலை செய்துவிட வேண்டும் என்ற திட்டத்தில் அப்துல்சலாம் இருந்துள்ளார். சிவாவிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அப்துல் சலாம் திட்டமிட்டு கொலை திட்டத்தை தீட்டியுள்ளார். கடந்த 6ஆம் தேதி அப்துல்சலாம் திட்டத்தின் படி அவர் விரித்த வலையில் சமாதானம் பேசுவதற்காக சிவா, அப்துல்சலாம் இருவரும் போன் மூலம் பேசியுள்ளனர்.
இதற்காக மது பார்ட்டி வைக்கவும் சிவா முடிவு செய்து, தான் வேலை செய்த இடத்தில் ரூ.3,000 கடனாக பெற்று அந்தத் தொகையை கொண்டு மதுவை வாங்கி சிவா அப்துல் சலாம், நூர் முகமது மகன் அமீஸ் (19) ஆகிய 3 பேரும் கோட்டகுப்பம் பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது அப்துல் சலாம் திட்டமிட்டபடி மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவாவின் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் குத்திக்கொலை செய்து கடலில் வீசியுள்ளனர்.
சிவாவின் மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து நகராட்சி பின்புறம் உள்ள மேயர் முத்துப்பிள்ளை குலத்தில் போட்டுவிட்டு கொலை செய்த ஆயுதத்தையும் குலத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சிவாவை தீர்த்து கட்டிய தகவலை அப்துல்சலாம், அமிஸ் ஆகியோர் தங்களது வீட்டுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இருவரையும் வெளியூருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவலை கேள்விப்பட்டு குவைத் நாட்டில் இருந்த அப்துல் சலாமின் தந்தை ஷேக் இஸ்மாயில் கோட்டக்குப்பம் வந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட சிவாவின் உடல் வெளியே வந்த பிறகு தான் கொலை சம்பவமே மூன்று நாட்கள் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தில் மது வாங்குவதற்கு கொலையாளிகளுக்கு பணம் கொடுத்த 16 வயது சிறுவன், கொலையாளிகளுக்கு மது பாட்டில்கள் வாங்கி கொடுத்த அமிஸ் தம்பியான 16 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்கள் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், முக்கிய கொலையாளிகள் அப்துல் சலாம், அமீஸ் ஆகிய இருவரும் கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
Read More : மீண்டும் ஆரோக்கிய உணவை நாடும் மக்கள்..!! 2024இல் அதிகம் சாப்பிட்ட உணவுகளின் பட்டியல் இதோ..!!