ஃபவுண்டேஷன் போட்ட பிறகும் முகத்தில் பளபளப்பு வரவில்லையா?. அப்போ இந்த தவறை செய்யாதீர்கள்!
Foundation: பார்ப்பதற்கு பளிச்சென தோன்ற வேண்டும் என்பதால் எப்போதும் மேக்அப் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். உண்மையில் அழகான தோற்றம் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். இந்தக் காலத்து பெண்கள் அரைமணி நேரம் வெளியே செல்ல வேண்டுமானாலும் மேக்கப் போடாமல் வருவதில்லை. பெண்கள் மேக்கப் போட ஆரம்பித்தாலே நீண்ட நேரம் எடுக்கும் என நினைத்து ஆண்கள் அவர்களை வெளியே அழைத்துச் செல்வதை தவிர்க்கின்றனர். பெண்கள் மேக்கப் போட்டு பழகிவிட்டால் அடுத்த முறை மேக்கப் இன்றி வெளியே செல்ல யோசிப்பார்கள்.
அப்படிபட்ட மேக்கப்பிற்கு அடித்தளமாக ஃபவுண்டேசன் இருக்கிறது. அதனை சரியாக அப்ளை செய்வது மிகவும் அவசியம். ஃபவுண்டேசனில் தவறு செய்தால், ஒட்டுமொத்த மேக்கப்பும் சரியில்லாமல் போக வாய்ப்புள்ளது. அந்தவகையில் இந்த பதிவில் பவுண்டேசன் போடும்போது பலரும் செய்யும் தவறுகளை காணலாம்.முகத்தில் ஃபவுண்டேஷன் தடவுவதற்கான சரியான வழி என்னவென்று பார்ப்போம்.
முதலில், முகத்தில் மேக்கப் போடுவதற்கு முன்பு அடித்தளத்தை அதாவது ப்ரைமரைப் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது நிறத்தை சமன் செய்கிறது மற்றும் முகத்தின் திறந்த துளைகளை நிரப்புகிறது. இது முகத்தை மென்மையாக்குகிறது மற்றும் முகத்தில் ஒப்பனைக்கு ஒரு மென்மையான தளத்தை உருவாக்குகிறது.
மேக்கப் போடும்போது அதிகப்படியான தயாரிப்புகளை பயன்படுத்தக்கூடாது. படிப்படியான கவரேஜை கொடுக்கவேண்டும். முகத்திற்கு மட்டும் பவுண்டேஷனை பயன்படுத்தாமல், கழுத்து மற்றும் காதுகளில் பயன்படுத்தலாம். இது உங்களுக்கு சீரான தோற்றத்தை தரும். ஃபவுண்டேசனை பயன்படுத்தாமல் இருப்பது உங்கள் ஒட்டுமொத்த மேக்கப்பையும் சீக்கிரமே களைத்து விடும் செட்டிங் ஸ்ப்ரே அல்லது டிரான்ஸ்யூலண்ட் பவுடரை பயன்படுத்துங்கள்.
நிறைய பேர் பவுண்டேசனை பயன்படுத்துவதற்கு முன்பு மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவதில்லை. ஆனால் உண்மையில், மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது அவசியமாகும். கன்சீலரை முகத்தில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். கன்சீலர் அமைக்க சிறிது நேரம் எடுக்கும். நீங்கள் பவுண்டேசனை பயன்படுத்தும் போது, தாடை மற்றும் மூக்கு நுனியில் கவனம் செலுத்த மறக்காதீர்கள். கன்சீலரையும், ஃபவுண்டேஷனையும் நன்றாகக் கலக்கினால், அது ஷீராக மாறும் வரை, இன்னும் அழகான பலனைப் பெறுவீர்கள்.
Readmore: ஷாக்!. இந்திய அணியில் பிளவு?. கம்பீர்-ரோஹித் சர்மா இடையே ஒருமித்த கருத்து இல்லை!.