முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஈரோடு தேர்தல் எதிரொலி..!! அரசியல் தலைவர்களின் சிலைகள் மூடல்..!! மேயர் அலுவலகங்களுக்கு சீல்வைப்பு..!!

The election code of conduct has come into effect in the Erode East constituency.
07:30 AM Jan 08, 2025 IST | Chella
Advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறவால் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisement

அப்போது, “ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுவதாகவும், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதியோடு முடிவடையும் என்றும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, ஈரோடு மேயர் மற்றும் துணை மேயர் அறைகள் சீலிடப்பட்டன. அதோடு, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Read More : இதய பாதிப்பு இருப்பவர்கள் இந்த பயிற்சிகளை செய்தால் உருக்கே ஆபத்து..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

Tags :
electionerodeஈரோடு கிழக்கு தொகுதி
Advertisement
Next Article