ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! விறுவிறுப்புடன் நடக்கும் தபால் வாக்குப்பதிவு..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்.5ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலும் வெளியிடப்பட்டதால், தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 46 பேர் போட்டியிடுகின்றனர். திமுக, நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தான், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 209 முதியோர் மற்றும் 47 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்களிக்கின்றனர். அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி தபால் வாக்கு பெறப்படுகிறது. தபால் வாக்குகளை பெற 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புடன் தபால் வாக்குகளை பெறும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தபால் வாக்குகள் வரும் 27ஆம் தேதி வரை பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : BREAKING | காதல் ஜோடி ஆணவக் கொலை வழக்கு..!! வினோத்குமார் குற்றவாளி என தீர்ப்பு..!! தூக்கு தண்டனையா..?