முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..!! எத்தனை வேட்பாளர்கள் போட்டி..? சுயேட்சையே இத்தனை பேரா..? தேர்தல் ஆணையம் வெளியிட்ட லிஸ்ட்..!!

The Election Commission has released details of how many candidates are in the fray in the Erode East constituency.
04:30 PM Jan 20, 2025 IST | Chella
Advertisement

ஈரோடு கிழக்கு தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Advertisement

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜனவரி 17ஆம் தேதி நிறைவு பெற்றது. இதில், திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமி ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக ஆகிய கட்சிகள் புறக்கணித்ததால், திமுக - நாம் தமிழர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் இன்று (ஜன.20) மாலை 3 மணியுடன் முடிவடைந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி உள்பட 47 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 8 பேர் தங்கள் மனுவை திரும்ப பெற்றுள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியலுடன் சின்னம் ஒதுக்கப்படும் நிலையில், ஒரே சின்னத்தை சுயேட்சைகள் இருவர் கேட்கும் பட்சத்தில், குலுக்கல் முறையில் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Read More : இரட்டை இலை வழக்கில் திடீர் திருப்பம்..!! மனுதாரருக்கு என்ன ஆச்சு..? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!!

Tags :
இடைத்தேர்தல்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்தேர்தல் ஆணையம்
Advertisement
Next Article