முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்... கருத்துக் கணிப்புகள் வெளியிட தடை....! தேர்தல் ஆணையம் அதிரடி

Erode East Assembly by-election... Ban on publishing opinion polls
03:24 PM Jan 24, 2025 IST | Vignesh
Advertisement

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 05.02.2025 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. இடைத்தேர்தலின் போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய / பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். இடைத்தேர்தலின் போது வாக்குப்பதிவிற்கு முத்தைய/ பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிடுவதற்கும், பரப்புவதற்கும் பின்வரும் வரையறைகள் பொருத்தும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

1951ஆம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126A.ஆம் பிரிவின் விதித்துறைகளின்படி, யாதொரு நபரும் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தூயதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையில் அது எதுவாயினும், பரப்பவோ கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்திணல் இதுசம்பந்தமாக அறிவிக்கப்படலாம்.

தேர்தல் ஆணையம் ஒரு பொது ஆணைப்படி பின்வருவனவற்றைக் கருத்தில் கொண்டு தேதி மற்றும் நேரத்தை அறிவிக்கும். அதாவது ஒரு பொதுத் தேர்தலின்போது. வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடராம்.

ஓர் இடைத்தேர்தல் அல்லது பல இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடைபெற்றால் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் மற்றும் வாக்குப்பதிவின் முதல் நாளிலிருந்து வாக்குப்பதிவு முடித்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம். பல இடைத்தேர்தல்கள் வெல்வேறு நாட்களில் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தொடரலாம். விதிமுறைகளை மீறும், வாதொரு நபரும் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
by-electionelection commissionerodePoll
Advertisement
Next Article