முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

EPFO பயனர்களே..!! இப்படி கூட UAN-ஐ ஆக்டிவேட் செய்யலாமா..? ஆதார் கார்டு இருந்தால் போதும்..!!

In this post, we will see how to activate UAN using Aadhaar-based OTP..?
11:56 AM Nov 26, 2024 IST | Chella
Advertisement

ஆதார் அடிப்படையிலான OTP-ஐ பயன்படுத்தி UAN-ஐ எவ்வாறு செயல்படுத்துவது..? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

வருங்கால வைப்பு நிதி தொடர்பான விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. இதனால் இனி பாஸ்புக்குகளைப் பார்ப்பது, ஆன்லைனில் க்ளைம் செய்வது, கண்காணிப்பு மற்றும் பணம் எடுப்பது போன்ற செயல்பாடுகள் எளிதாக இருக்கும். EPFO அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் UAN ஆக்டிவேஷனை கட்டாயமாக்கியுள்ளது. எம்ப்ளாய்மென்ட் லிங்க்டு இன்சென்டிவ் திட்டத்தைப் பெறுவதற்கு ஊழியர்களின் UAN ஆக்டிவில் உள்ளதா? என்பதை உறுதி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆதார் அடிப்படையிலான OTP-ஐ பயன்படுத்தி ஊழியர்களின் UAN நம்பரை செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு EPFO-வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த OTP மூலம் UAN ஐ செயல்படுத்திய பிறகு ஊழியர்கள் EPFO ​​இன் விரிவான ஆன்லைன் சேவைகளை எளிதாகப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிதியாண்டில் சேரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆதார் அடிப்படையிலான ஓடிபி மூலம் UAN ஆக்டிவேட் செய்யும் செயல்முறையை முடிக்க வேண்டும் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. UAN -ஐ ஆக்டிவேட் செய்ய இபிஎஃப் உறுப்பினர்களுக்கு தடையற்ற அக்சஸ்-ஐ வழங்குகிறது. இதன் மூலம் ஊழியர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கை நிர்வகிக்கலாம், PF பாஸ்புக்கை டவுன்லோட் செய்து பார்க்கலாம், பணத்தை எடுக்கலாம், அட்வான்ஸ் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

ஆதார் அடிப்படையிலான OTP ஐப் பயன்படுத்தி UAN-ஐ எவ்வாறு செயல்படுத்துவது..?

* முதலில் EPFO ​​மெம்பர் போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.

* அதில், “இம்பார்டெண்ட் லிங்க்ஸ்” என்பதன் கீழுள்ள “ஆக்டிவேட் UAN” லிங்க்-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

* UAN, ஆதார் எண், பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பர் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.

* EPFO இன் டிஜிட்டல் சேவைகளை அக்சஸ் செய்ய, ஊழியர்கள் தங்கள் ஃபோன் நபரை ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* ஆதார் OTP வெரிஃபிகேஷனுக்கு ஒப்புக்கொள்ளவும்.

* உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி பெற, “கெட் ஆதோரைசேஷன் பின்" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். ஆக்டிவேஷனை முடிக்க OTP ஐ என்டர் செய்ய வேண்டும்.

* வெற்றிகரமாக ஆக்டிவேஷன் செய்யப்பட்ட உடன் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு பாஸ்வேர்டு அனுப்பி வைக்கப்படும்.

    இதையடுத்து, UAN ஆக்டிவேஷனில் பேஸ் ரெகக்னைசேஷன் டெக்னாலஜி மூலம் பயோமெட்ரிக் ஆதன்டிகேஷன் சேவை சேர்க்கப்படும். இது ஊழியர்களை டிஜிட்டல் சேவைகளுடன் இணைப்பதையும், திட்டங்களின் நேரடிப் பலன்களை வழங்குவதையும், ஊழியர்கள் தங்கள் உரிமைகளை தடையின்றி பெறுவதையும் உறுதி செய்கிறது.

    Read More : ஸ்கூல் போக அடம்பிடிக்கும் குழந்தைகள்..!! பெற்றோர்களே நீங்கள் இதை மட்டும் மறக்காமல் செய்து பாருங்க..!!

    Tags :
    AadhaarepfoOTPuan
    Advertisement
    Next Article